- Advertisement -
Homeபொழுதுபோக்குகண்மணி அன்போடு காதலன் நான்…. - ரி ரிலீஸ் ஆகிறது கமல் நடித்த குணா, போடு...

கண்மணி அன்போடு காதலன் நான்…. – ரி ரிலீஸ் ஆகிறது கமல் நடித்த குணா, போடு வெடிய, எப்போ படம் வருதுன்னு தெரியுமா?

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சகலகலா வல்லவன் என்பதை பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிரூபித்து விட்டார். மூன்றாம் பிறை, நாயகன், தேவர்மகன், இந்தியன், குணா, மகாநதி, தசாவதாரம், குருதிப்புனல், அன்பே சிவம் என பல படங்களில் எல்லை கடந்த நடிப்பின் உச்சத்தை தொட்டி அசத்தியிருப்பார் கமல்ஹாசன்.

அதனால் உலகநாயகன் என்று கொண்டாடப்படும் கமல்ஹாசன், நடிப்பில் தொட்ட உச்சங்களை மற்ற நடிகர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. நடிப்பில் அவரது நிழலைக் கூட நெருங்க முடியாது. ஒரு தனி மனிதராக, அரசியல்வாதியாக கமல் கடுமையான விமர்சனங்களில் சிக்கினாலும், ஒரு கலைஞராக அவரை யாருமே விமர்சிக்க முடியாது. தொழில்நுட்பத்தில் அவருக்கு நிகர் அவராக தான் இருப்பார்.

- Advertisement -

கமல் நடித்த படங்களில் பல படங்கள், அவரது நடிப்பாற்றலை சொல்லும் படங்களாக இருந்திருக்கின்றன. அதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய படங்களில் ஒன்றாக இருப்பது குணா. கடந்த 1991ம் ஆண்டில் குணா படம் வெளியானது. கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, வரலட்சுமி, அஜய் ரத்னம், எஸ்பி பாலசுப்ரமணியம், கிரிஷ் கர்னாட், சரத் சக்சேனா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த படத்தை இயக்குனர் மற்றும் நடிகர் சந்தானபாரதி டைரக்ட் செய்திருந்தார். எழுத்தாளர் பாலகுமாரன் இந்த படத்துக்கு கதை வசனம் எழுதியிருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே என்ற பாடலை கமல்ஹாசனும், எஸ் ஜானகியும் பாடியிருந்தனர்.

- Advertisement -

கமல்ஹாசன் நிறைய பாடல்களை, தனது படங்களில் பாடியிருக்கிறார். அதில், வசனங்களுடன் கமல் பாடிய இந்த குணா படப் பாடல், மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பாடலாக இருந்து வருகிறது. இசை நிகழ்ச்சிகளில் கண்டிப்பாக இந்த பாடல், ரசிகர்கள் விரும்பி கேட்கிற ஒரு பாடலாக இன்றுவரை இருந்து வருகிறது.

அதனால்தான், மஞ்சும்மெல் பாய்ஸ் படத்தில், குணா குகையில் எடுக்கப்பட்ட இந்த படத்தில், அந்த பாடல் இடம்பெற்றது, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று, வசூலை வாரிக் குவித்தது. இந்நிலையில், குணா படம் மீண்டும் ரி ரீலீஸ் செய்யப்படுகிறது. வருகிற 21ம் தேதி இந்த படம் தமிழ்நாடு உள்பட உலகம் முழுவதும் ரி ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 33 ஆண்டுகளுக்கு பிறகு வரும் குணாவை வரவேற்று கொண்டாட, கமல் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்