சிவகார்த்திகேயன் இதுவரை பெரிதாக எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். அவரது படங்களை குடும்பம் குடும்பமாக சென்று ரசிகர்கள் ரசிப்பதுண்டு. அதற்கு ஒரே காரணம் அவர் ரொம்பவே கஷ்டப்பட்டு வளர்ந்தவர். அதற்கு தகுந்தபடிதான் அவரும் பொது நிகழ்வுகளில் நடந்துகொள்வார். இன்னும் சொல்லப்போனால் யாரிடமும் ஈகோ இல்லாமல் பழகும் மிகச்சில நடிகர்களில் சிவாவும் ஒருவர் என்ற பெயரையே அவர் எடுத்திருக்கிறார்.
இந்த சூழலில் சிவகார்த்திகேயனுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கும் இசையமைப்பாளர் டி.இமான் எஸ்கே மீது பெரும் குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியிருக்கிறார். அவர் சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து பணியாற்ற முடியாது. ஏனெனில் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் ஒன்றை செய்துவிட்டார். அந்த துரோகம் என்னவென்று என்னால் வெளியே சொல்ல முடியாது.
அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று ரொம்ப ரொம்ப தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன். ஏன் இப்படி எனக்கு துரோகம் செய்தீர்கள் என்று அவரிடமும் நான் கேட்டுவிட்டேன். அவர் என்ன துரோகம் செய்தார் என்றும் நான் கேட்டதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்றும் என்னால் வெளியில் சொல்ல முடியாது. அனைத்தையும் நான் என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்துக்காக மறைக்கிறேன்” என தெரிவித்தார்.
அவரது இந்தப் பேட்டி சிவகார்த்திகேயன் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் இமான் சொல்ல வருவது அவருடைய பெர்சனல் விஷயம் என்றால்; அவர் தனது மனைவியை பிரிந்ததற்கும் சிவகார்த்திகேயன் மீது குற்றச்சாட்டு வைப்பதற்கும் காரணம் இருக்குமோ எனவும் முடிச்சு போட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி தனது ட்விட்டர் பக்கத்தில், “உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதைவிட கேடுகெட்ட செயல் வேறு எதுவுமில்லை” என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் பிஸ்மி இந்த ட்வீட் மூலம் எதை மறைமுகமாக உணர்த்துகிறார் என்பது புரியாமல் இல்லை. இருந்தாலும் ஒரு தரப்பு வாதத்தை வைத்து மட்டும் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது என கூறுகின்றனர்.
உடன்பிறந்த தம்பியாகவே நினைத்தவரின் குடும்பத்தில் பொறுக்கித்தனத்தை காட்டியதைவிட கேடுகெட்ட செயல் வேறுஎதுவுமில்லை
— Valaipechu J Bismi (@jbismi_offl) October 17, 2023
மேலும் சிவகார்த்திகேயன் தொடர்ந்து இந்த விஷயத்தில் அமைதி காத்தால் ஒரு சிலர் சொல்வதுதான் உண்மையோ என்ற எண்ணம் பெரும்பாலானோரிடத்தில் உருவாகிவிடும் எனவும் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். மாவீரன் மௌனம் கலைப்பாரா?.. பொறுத்திருந்து பார்ப்போம்.





