கடந்த 1980களில் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அர்ஜூன். ராமநாராயணன் இயக்கிய நன்றி படம்தான் அவரது முதல் படம். தொடர்ந்து சங்கர் குரு தாயம் ஒண்ணு படிச்சபுள்ள பட்டிக்காட்டான் கலாட்டா கல்யாணம் உள்ளிட்ட படங்களில் நடித்து அர்ஜூன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
குறிப்பாக ஜெண்டில்மேன் முதல்வன் ஜெய்ஹிந்த் சேவகன் பிரதாப் வேதம் ரிதம் ரோஜாவை கிள்ளாதே ஆயுதபூஜை கர்ணா போன்ற சில படங்கள் நடிகர் அர்ஜூனுக்கு பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருந்து அவரை முன்னணி நட்சத்திர நடிகராக மாற்றியது. படங்களில் நடித்தது மட்டுமே தயாரிப்பாளர் டைரக்டராகவும் அர்ஜூன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால் 60 வயதுகளை கடந்த நிலையில் நடிகர் அர்ஜூன் சமீபகாலமாக சில படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்து வருகிறார். குறிப்பாக மங்காத்தா இரும்புத்திரை லியோ விடாமுயற்சி போன்ற சில படங்களில் அர்ஜூன் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். எனினும் அவரது வில்லத்தனமான நடிப்புக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது.
எனினும் நடிகர் அர்ஜூன் நல்ல படங்களில் நடித்தவர். குறிப்பாக தேசப்பற்று மிக்க திரைக்கதைகளில் வெளியான அவரது படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக ஜெய்ஹிந்த் முதல்வன் போன்ற படங்களில் அர்ஜூன் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அவரது சினிமா பயணத்தில் அவை முக்கிய படங்களாகவும் இருந்தன.
அதனால் அர்ஜூன் ரசிகர்கள் அவர் வில்லனாக படங்களில் நடிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித்து நேரடியாக சிலர் அவரிடம் தெரிவித்து நல்ல கேரக்டர்களில் குறிப்பாக ஹீரோவாக நடியுங்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் அர்ஜூன் கூறுகையில், இனி வில்லன் கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்று உறுதியளித்திருக்கிறார்.
இப்போது நான் வில்லனாக நடிப்பதை நிறுத்தி விட்டேன். விடாமுயற்சி படம் தான் கடைசி. எனக்காக நான் நிறுத்தவில்லை. நிறைய ரசிகர்களுக்கு நான் வில்லனாக பண்றது பிடிக்கவில்லை. என்னை நல்ல கேரக்டரில் பார்த்துவிட்டு ஒரு வில்லனாக நடிக்கிறது, பேசறது அவங்களுக்கு பிடிக்கலே. வில்லனா நடிச்சதுக்கு விருதெல்லாம் கூட கொடுத்து இருக்காங்க. ஆனால் என் ரசிகர்களுக்கு பிடிக்காததால் நான் இனிமேல் விலல்லனா நடிக்க மாட்டேன் என்று நடிகர் அர்ஜூன் கூறியிருக்கிறார்.





