- Advertisement -
Homeபொழுதுபோக்குகதை திருட்டு விவகாரத்தில் மீண்டும் சிக்கிய இயக்குநர் - உண்மை கதாசிரியருக்கு கிடைத்தது என்ன தெரியுமா

கதை திருட்டு விவகாரத்தில் மீண்டும் சிக்கிய இயக்குநர் – உண்மை கதாசிரியருக்கு கிடைத்தது என்ன தெரியுமா

- Advertisement -

தமிழ் சினிமாவில், அடிக்கடி கதைகள் திருட்டு சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஏதாவது ஒரு ஹீரோ நடிக்கும் படம் என்று துவங்கி, கதை பற்றி பேச்சு வந்தால், உடனே ஒரு இயக்குநரோ, கதாசிரியரோ இது என்னுடைய கதை என்று சொல்வது வழக்கமாகி விட்டது. ஆனால், பல கதைகள் அப்படி திருடப்பட்டு எடுப்பதும் உண்மைதான்.

அதனால்தான், இந்த கதை திருட்டு விவகாரத்தில் சிக்க விரும்பாத சில இயக்குநர்கள், டைரக்டராக சில ஆண்டுகள், பல ஆண்டுகள் முன்பு வந்த படங்களில் இருந்து சில காட்சிகளை எடுத்து, அதையே ஒரு கதையாக உருவாக்கி படமாக்கி விடுகின்றனர். அந்த படங்கள் மெகா ஹிட் படங்களாகவும் வெற்றி பெற்று விடுகின்றன.

- Advertisement -

பூமி படத்தின் இயக்குநர் லட்சுமணன், ஏற்கனவே இதுபோன்று கதை திருட்டு விவகாரத்தில் பேசப்பட்டவர். இப்போது மீண்டும் அவர் இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். அதாவது, கன்னடத்தில் இவரால் எடுக்கப்படும் ஒரு படம், வேறோரு இயக்குநரின் கதை என தெரிய வந்துள்ளது.

கேஎஸ் ரவிக்குமார், கூகுள் குட்டப்பா என்ற படத்தை தயாரித்து, அதில் நடித்தும் இருக்கிறார். அந்த படத்தை சபரி, சரவணன் என இரண்டு பேர் இயக்கி இருந்தனர். இதில், சரவணன் என்பவரது கதையை தான், இயக்குநர் லட்சுமணன், கன்னட படமாக எடுக்கிறார்.

- Advertisement -

அந்த கன்னட படத்தை இயக்கும் லைகா நிறுவனத்திடம், சரவணன் கதை சொல்ல நேரில் போன போதுதான், இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. இந்த கதையைத் தானே, எங்களது தயாரிப்பில், கன்னடத்தில் இயக்குநர் லட்சுமணன் எடுக்க உள்ளார் என அங்கு கூற, அந்த லட்சுமணனையே, சரவணன் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.

அப்போது, அந்த கதையை எடிட்டர் ஒருவர் சொன்னதாக அவர் கூற, அப்போதுதான் அந்த எடிட்டரிடம் சரவணன் ஏற்கனவே கதையை சொன்னது தெரிய வந்திருக்கிறது. பின்னர் ஒருவழியாக பேசி, பிரச்னையை சுமூகமாக முடிக்க, இந்த கதையின் உண்மையான கதாசிரியர் சரவணனுக்கு ரூ. 15 லட்சம் கொடுத்து, இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்