- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது... சூசகமாக பதில் கூறிய வெங்கட் பிரபு... உற்சாகத்தில் ரசிகர்கள்...

கோட் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது… சூசகமாக பதில் கூறிய வெங்கட் பிரபு… உற்சாகத்தில் ரசிகர்கள்…

- Advertisement -

தளபதி விஜய் தற்போது நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஏராளமான ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இதில் முதலில் நாம் பார்ப்பதில் ஏ ஐ தொழில் நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி இருப்பது தான். இதற்கான சூட்டிங் தொடங்குவதற்கு முன்பே இந்த தொழில்நுட்பத்தை சிறப்பாக கையாள்வது என படக் குழுவினர் முடிவு செய்துவிட்டார்கள்.

 

- Advertisement -

இதற்காக தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் கல்பாத்தி அர்ச்சனா ஆகிய மூவரும் வெளிநாடு சென்றார்கள். அங்குள்ள பிரபல நிறுவனத்தை அனுகிய அவர்கள் விஜய்யை மிக இளமையாக எப்படி காட்டுவது என்பதை யோசித்து அதற்கு ஏற்றவாறு தங்கள் காய்களை நகர்த்தினார்கள்.

 

- Advertisement -

வேலையை முடித்துவிட்டு மூவரும் இந்தியா திரும்ப இனிதே படப்பிடிப்பு தொடங்கியது. தாய்லாந்து துருக்கி இலங்கை ரஷ்யா என பல்வேறு பகுதிகளில் இதன் படபிடிப்பை நடத்தி இருக்கிறார் வெங்கட் பிரபு. டைம் ட்ராவல் தான் இந்த திரைப்படத்தின் கான்செப்ட் என்பது தெரிந்து விட்டது.

 

கோட் திரைப்படத்தில் விஜய் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். இதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையிலேயே படத்தின் போஸ்டரும் அமைந்தது. ஆனால் சினிமா வட்டாரத்தில் வேறொரு பேச்சு அடிபடுகிறது. அதாவது டைம் ட்ராவல் கதை என்பதால் எதிர்காலத்தில் வரும் விஜய் தான் இதில் காட்டி இருப்பதாக கூறுகிறார்கள். அதே சமயம் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது.

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆனா பல விஷயங்களை வெங்கட் பிரபு வைத்திருக்கிறார். அதில் மிக முக்கியமான ஒன்று, மறைந்த நடிகர் விஜயகாந்த் படத்தில் ஒரு நிமிடத்திற்கும் மேலாக தோன்றுவது தான். ஏ ஐ தொழில் நுட்பத்தின் மூலம் இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். இதேபோல் இளையராஜாவின் மகளும் மறைந்த பாடகியுமான பவதாரணியின் குரலையும் கோட் திரைப்படத்திற்காக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 

இதுபோக நடிகை திரிஷா நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் படத்தின் கேமியோ ரோலில் வருவதாக பேசப்படுகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் வெளியாகும் நிலையில், படத்தில் இருந்து விசில் போடு பாடல் மட்டும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த மாதம் விஜயின் பிறந்த நாளும் வருவதால், அடுத்த அப்டேட் என்ன என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு ஏற்றது போலவே வெங்கட் பிரபு பிரபுவும் தற்போது ட்விட் செய்து இருக்கிறார். அனைவரின் விருப்பமும் உண்மையாகும் என்று அவர் கூறியிருக்கிறார். இதனால் கோட் திரைப்படத்திலிருந்து டீசர் வருமா அல்லது இரண்டாவது பாடல் வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்