- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் மகனுக்கு சினிமாவில் நடிப்பது குறித்து நிறைய அட்வைஸ் செய்தேன், ஆனால் … - பீனிக்ஸ்...

என் மகனுக்கு சினிமாவில் நடிப்பது குறித்து நிறைய அட்வைஸ் செய்தேன், ஆனால் … – பீனிக்ஸ் டீசர் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளாக, நடிகர் விஜய் சேதுபதிக்கு சரியாக படங்கள் ஓடாத நிலையில் பலத்த ஏமாற்றத்தில் இருந்தார். ஆனால் இப்போது வெளியாகி உள்ள அவரது 50வது படம் மகாராஜா, மிகப்பெரிய வெற்றியை அவருக்கு தேடித் தந்திருக்கிறது. படம் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருக்கிறது. வசூலும் அபரிதமாக வந்துக்கொண்டு இருக்கிறது.

குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா படத்தில், சலூன் கடை பார்பர் கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். அபிராமி, அனுராக் காஷயப், சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதி திடீரென ரஜினி, கமல், விஜய் போன்றவர்களின் படங்களில் வில்லனாகவும் நடித்து அசத்தினார். இந்தியில், ஷாருக்கன் நடித்த ஜவான் படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்து பாலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் பல படங்களில் கேமியோ ரோலிலும் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

இப்படி அவர் ஒரே பாதையில் செல்லாமல் மாறி மாறி நடித்தது, ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அவரை ஹீரோவாக நினைத்த படத்தில் வில்லனாக, வில்லனாக நினைத்த படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தார். சில படங்களில் அவர்தான் நாயகன், வில்லன் என்று நினைத்து படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு கேமியோ ரோலில் நடித்தும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இந்த குளறுபடிகளுக்கு எல்லாம் தீர்வாக, இனி ஹீரோவாக மட்டுமே இனி நடிப்பேன் என அவர் முடிவு செய்திருப்பது இனி அவரது திரை பயணத்தில் பழையபடி முன்னேற்றத்தை தரும் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது. அதன் முதல் எடுத்துக்காட்டாக மகாராஜா படம் பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. இதற்கிடையே விஜய் சேதுபதி மகன் சூர்யாவும் பீனிக்ஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக மாறியிருக்கிறார்.

பீனிக்ஸ் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, என் மகன் ஹீரோ ஆவான் என்று கற்பனையில் கூட நான் நினைக்கவில்லை. இந்த துறையில் ஜெயிப்பது, நிலைத்து நிற்பது, சாதிப்பது ரொம்ப கஷ்டம் என்று அவனிடம் கூறினேன். நான் இங்கு சர்வைவ் பண்ண எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பதை அவனிடம் பலமுறை நான் கூறியிருக்கிறேன். நிறைய அழுத்தங்கள் நிறைந்த இந்த துறையில், என் மகனுக்கும் நிறைய பாரங்கள் இருக்கும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் நடிப்பதுதான் பிடித்திருக்கிறது என்று அவன் முடிவு செய்துவிட்டான். பீனிக்ஸ் டீசர் பார்த்து உண்மையில் நான் மகிழ்ந்தேன் என்று கூறினார்.

- Advertisement -

சற்று முன்