- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஹீரோயின் எனக்கு வேண்டாம், மெகா ஹிட் படம் மகாராஜா டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன் திடீர்...

அந்த ஹீரோயின் எனக்கு வேண்டாம், மெகா ஹிட் படம் மகாராஜா டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன் திடீர் மறுப்பு; அடுத்த படத்திலேயே இப்படி ஒரு குளறுபடியா?

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிற படம் மகாராஜா. இது விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ள 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிளாப் படங்களை தந்த விஜய் சேதுபதிக்கு இது மிகப்பெரிய பம்பர் ஹிட் படமாக அமைந்து, அவருக்கு கம்பேக் கொடுத்திருக்கிறது.

அதே போல் குரங்குபொம்மை படத்துக்கு, 7 ஆண்டுகள் கழித்து நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய படம்தான் மகாராஜா. அவருக்கும் இந்த படம் பெரிய திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. ஏனெனில் சரியான படம் இயக்க வாய்ப்பு அமையாமல் தவித்து காத்திருந்த அவருக்கு, மகாராஜா பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

வழக்கமாக இதுபோல் ஒரு மிகப்பெரிய வெற்றியை ஒரு இயக்குனரும், ஒரு நடிகரும் கொடுக்கும் பட்சத்தில் அடுத்து ஒரு படத்தை அந்த கூட்டணியே தொடர்வதும், அதே பட நிறுவனம் அந்த படத்தை தயாரிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் மகாராஜா படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி – நித்திலன் சுவாமிநாதன் அடுத்த படத்தில் இணையவில்லை.

ஆனால் மகாராஜா படம் எடுப்பதற்கு முன்பே, கதாநாயகியை மையப்படுத்திய ஒரு கதையை படமாக எடுக்க நித்திலன் சுவாமிநாதன் தயாராகி இருக்கிறார். இந்த கதையை மகாராஜா படத்தை தயாரித்த பேஷியன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனமே தயாரிப்பதாகவும் இருந்திருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

ஆனால் அந்த படம் ஏதோ சில காரணங்களால் துவங்கப்படாமல் அப்படியே பேச்சுவார்த்தையோடு நின்றுபோன நிலையில், இப்போது மீண்டும் அந்த படத்தை தயாரிக்க பேஷியன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது. கதாநாயகியை மையப்படுத்திய அந்த கதையில் நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளது.

இதற்கு படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா வேண்டாம். வேறு நாயகியை வைத்து அந்த படத்தை எடுக்கலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஏற்கனவே நயன்தாராவுக்கு சம்பள முன்பணம், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கொடுத்திருப்பதால், நயன்தாராவே அதில் நடிக்கட்டும் என்று கூறியிருக்கின்றனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை டைரக்டர் நித்திலன் சுவாமிநாதன், வேண்டாம் என மறுத்திருப்பது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்