நடிகர் சிலம்பரசன், தமிழ் சினிமா அஷ்டவதானி டிஆர் என அழைக்கப்படும் டி ராஜேந்தரின் மூத்த மகன், மற்றொரு மகன் குறளரசன், இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். மகள் இலக்கியாவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி விட்டது. ஆனால் 41 வயது கடந்தும் இன்னும் சிலம்பரசனுக்கு திருமணம் ஆகவில்லை.
தமிழ் சினிமாவில் நீண்டகாலமாக திருமணம் ஆகாத சில நடிகர்களுக்கு சமீபகாலமாக திருமணமாகி வருகிறது. குறிப்பாக கங்கை அமரன் மகன், இயக்குனர் வெங்கட்பிரபு தம்பி பிரேம்ஜிக்கு, 45 வயதான நிலையில் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடந்தது. ஆர்யாவுக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துவிட்டது.
இன்னும் தமிழ் சினிமாவில் திருமணம் செய்துக்கொள்ளாமல் 40 வயதுகளை கடந்த நிலையில் நடிகர் விஷால், நடிகர் சிம்பு போன்றவர்களே இருக்கின்றனர். அதனால் எங்கு அவர்களை ரசிகர்கள் பார்த்தாலும், எந்த விழாவில் அவர்கள் மேடை ஏறினாலும் அவர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி உங்கள் திருமணம் எப்போது, என்பதாக தான் இருக்கிறது. இது ஒருவிதத்தில் அவர்களை எரிச்சலடையவே செய்கிறது.
ஒரு நேர்காணலில் இதுகுறித்து நடிகர் சிலம்பரசன் கிண்டலாக கூறும்போது, 70 வயது, 80 வயது ஆன முதியவர்கள் சிலர் இறந்து விடுகின்றனர். அதற்காக 70 வயதான, 80 வயதான உயிருடன் இருக்கும் முதியவர்களை பார்த்து, அவர்கள் இந்த வயதில் இறந்துவிட்டார்களே, ஆனால் இந்த வயதில் நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கிறீர்களே என்று கேட்டால், அது சரியாக இருக்குமா, அதுபோல்தான் திருமணம் ஆகாதவர்களை கேட்பதும் இருக்கிறது, என்று கூறியிருந்தார்.
இதே போல் மற்றொரு நேர்காணலில் பேசிய நடிகர் சிலம்பரசன், தனது வருங்கால மனைவி குறித்து கூறுகையில், அவரது எதிர்பார்ப்புகளை வெளிப்படையாக பேசியிருக்கிறார். எனக்கு காஃபி போட்டுக் கொடுக்கவோ, சமைத்து தரவோ பெண் தேவையில்லை. அதற்கு பணியாட்கள் இருக்கிறார்கள். என்னை பொருத்த வரை என்னை டாமினேட் செய்யும் பெண்தான் எனக்கு மனைவியாக வரவேண்டும்.
அந்த பெண் சொல்லும் பேச்சைக் கேட்டு நான் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த பெண் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்று சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நேர்காணலில் சிலம்பரசன் இப்படி கூறியிருக்கிறார். எந்த பெண்ணை திருமணம் செய்தாலும், கல்யாணம் ஆன 10 நாளிலேயே, கணவனை, மனைவி டாமினேட் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். அவங்க சொல்றபடிதான் கேட்டு கணவன் நடந்தாகணும். இதுகூட தெரியாத அப்பாவி மனுஷனா சிம்பு இருக்கிறாரே, என்று ரசிகர்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.





