நடிகர் கமல்ஹாசன், கடந்த 1996ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். இந்த படத்தின் இந்தியன் தாத்தாவாக சேனாபதி கேரக்டரில் நடித்த கமலுக்கு சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்தது. இதற்கு முன்பு நாயகன், மூன்றாம் பிறை படங்களுக்காக கமல் சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றிருந்தார்.
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படத்தின் இறுதியில், வெளிநாட்டில் இருந்து இந்தியன் தாத்தா கமல் பேசுவது போல் காட்சியை முடித்திருந்தார். அப்போதே இந்தியன் 2ம் பாகமாக வெளியாகும் என்பதை டைரக்டர் ஷங்கர் சூசகமாக சொல்லிருந்தார். இப்போது இந்தியன் 2, இந்தியன் 3 என இரண்டு பாகங்களையும் ஒரே காலகட்டத்தில் எடுத்து முடித்து விட்டார் இயக்குனர் ஷங்கர்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, இம்மாதம் 1ம் தேதி சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன், இந்தியன் 2 பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்யபப்ட்ட நிலையில், அதில் கலந்துக்கொள்ள கமல் வரவில்லை. அதனால் அந்த பிரஸ்மீட் நடக்காமல், தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியன் 2 படம் ஜூலை 12ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை மும்பையில் இந்தியன் 2 படத்தின் ட்ரெயிலர் வெளியீடு செய்யப்படுகிறது. இந்த விழாவில் படத்தின் இயக்குனர் ஷங்கர் மட்டுமே கலந்துக்கொண்டார். படத்தின் நாயகன் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் ஏற்கனவே லால் சலாம் படத்தை தயாரித்து அது சரியாக போகவில்லை. இப்போது இந்தியன் 2, இந்தியன் 3, கேம் சேஞ்சர், விடாமுயற்சி, வேட்டையன் உள்ளிட்ட படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து, ஏகப்பட்ட நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும் மிக விரைவில் படத் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
இதற்கிடையே விக்ரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, இந்தியன் 2 இந்தியன் 3 படங்களுக்கு கமலுக்கு ரூ. 150 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் 6 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியன் 2 படத்துக்கு ரூ. 30 கோடி கமலுக்கு சம்பளம் பேசிய நிலையில், இந்தியன் 3 படத்துக்கு ரூ. 120 கோடி சம்பளம் கேட்டு, ரூ. 150 கோடி என்ற கணக்கில் கொண்டு வந்திருக்கிறார் கமல். இப்போது சம்பள பட்டுவாடா சரியாக நடக்காத நிலையில், இந்தியன் 2 பிரமோசன் நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் வர மறுப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதனால் டைரக்டர் ஷங்கர் பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.





