- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட சூப்பர்ஹிட் படமான மாநாடு படம் அடுத்த லெவலுக்கு போகிறதா? ஏஐ தொழில்நுட்பத்தில் நடக்க போகும்...

அட சூப்பர்ஹிட் படமான மாநாடு படம் அடுத்த லெவலுக்கு போகிறதா? ஏஐ தொழில்நுட்பத்தில் நடக்க போகும் ஒரு தரமான சம்பவம் – ஆனா சிம்பு இதுக்கு ஓகே சொல்வாரா?

- Advertisement -

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனுக்கு 2 மகன்கள். அதில் மூத்த மகன் வெங்கட்பிரபு, துவக்கத்தில் சில படங்களில் நடிகராக இருந்து பிறகு சென்னை 28 படம் மூலம் இயக்குனராக மாறியவர் வெங்கட்பிரபு. இவரது இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா, கோவா, சரோஜா, மாநாடு போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், முன்னணி இயக்குனராக மாறினார். அவ்வப்போது வெங்கட்பிரபு அவரே இயக்கும் படங்களிலும், பிற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் அஜீத்குமாரின் 50வது படத்தை இயக்கும் வாய்ப்பை, இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு தந்தார். கிடைத்த வாய்ப்பை மிக அருமையான பயன்படுத்தி, மிகப்பெரிய ஹிட் படமாக அதைக் கொடுத்தார். அதே போல் அவரது இயக்கத்தில் இப்போது விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் நடிகர் விஜய், இந்த படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதே, தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு விட்டார். மேலும், தி கோட் படத்தை தொடர்ந்து, எச் வினோத் இயக்கும் ஒரு படத்தில் நடித்துவிட்டு, தனது 69வது படத்துடன் சினிமா வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அரசியலில் தன் பயணத்தை தொடரவும் முடிவு செய்துள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கிய படங்களில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மாநாடு. சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா, கருணாகரன், ஒய்ஜி மகேந்திரா, எஸ்ஏ சந்திரசேகரன், வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. டைம் டிராவல் கதையை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தில் போலீஸ் அதிகாரியான எஸ்ஜே சூர்யா நடிப்பு, வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

இப்போது, ஏஐ தொழில்நுட்ப காலமாக சினிமா துறை மாறி வருகிறது. மறைந்த நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், விவேக் ஆகியோர், தி கோட் படத்தில், ஏஐ தொழில்நுட்பத்தில் மீண்டும் நடித்துள்ளனர். அதே போல் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு போன்றவர்கள் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளனர். இளையராஜா மகள், மறைந்த பின்னணி பாடகி பவதாரணியின் குரலில், ஏஐ தொழில்நுட்பத்தில், தி கோட் படத்தில் அவர் பாடிய பாடல் சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்நிலையில், வெங்கட்பிரபு இயக்கிய வெற்றிப் படம் மாநாடு, இப்போது ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்படுகிறது. இந்த படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களுமே, இந்த படத்தில் ஆங்கிலத்தில் பேச உள்ளனர். ஆனால் உண்மையில், அவர்கள் யாருமே டப்பிங் வரப்போவது இல்லை. முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தில் சிம்பு, எஸ்ஜே சூர்யா, ஒய்ஜி மகேந்திரா என படத்தில் வந்த அனைவருமே ஏஐ தொழில்நுட்பத்தில் அவர்கள் குரலில் பேசுவது போல, ஆங்கிலத்தில் மாநாடு படம் டப்பிங் செய்யப்படுகிறது. இதுகுறித்து சிம்புவிடம் கேட்டு அனுமதி வாங்கி விடுங்கள், அவரது குரலை அவரது அனுமதியின்றி ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தியதற்காக கோபித்துக்கொள்ளப் போகிறார் என்று அவரது ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்