- Advertisement -
Homeபொழுதுபோக்குஇங்கே உத்தமர்கள் எத்தனை பேர்? அவர்களை ஏன் கொச்சைப்படுத்தறீங்க? - விஜய் - திரிஷா விவகாரத்தில்...

இங்கே உத்தமர்கள் எத்தனை பேர்? அவர்களை ஏன் கொச்சைப்படுத்தறீங்க? – விஜய் – திரிஷா விவகாரத்தில் நடிகை ஷகிலா ஆவேசம்!

- Advertisement -

தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு சினிமாவில் பல படங்களில் கவர்ச்சியாக நடித்தவர் நடிகை ஷகிலா. கடந்த 1990களில் ஷகிலா நடித்த கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்தது. சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு அதிகமாக ரசிகர்களை கவர்ந்த கவர்ச்சி நடிகை ஷகிலா என்றால் அது மிகையல்ல.

தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தை துவங்கி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய் இப்போது தமிழகத்தின் அடுத்த முதல்வரா என்கிற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார். இதற்கிடையே அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் விஜய் திரிஷா நட்பும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஷகிலா கூறியதாவது, ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கக் கூடாதா? ஏன் நல்ல நண்பர்களாக பழகக் கூடாதா? ஏன் ஒரு நல்ல நட்பை கொச்சைப்படுத்த வேண்டும்? அவர்களுடைய நட்பை விமர்சிப்பது தவறானது.

விஜய்க்கு பல தடைகள் வந்துள்ளன. மற்றவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட பல விஷயங்கள் அவருக்கு மறுக்கப்பட்டுள்ளன. ஒரு மனிதனை எவ்வளவு தான் கஷ்டப்படுத்துவீர்கள்? பதவி இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்ய முடியுமா? பதவி இல்லாமலேயே நல்லது செய்ய முடியாதா? தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் தன்னுடைய நிலையை விட்டுவிட்டு மக்களுக்காக வந்தது சின்ன விஷயம் அல்ல.

- Advertisement -

இங்கு யார் உத்தமர்கள்? எத்தனை பேர் ராமர் போல இருக்கிறார்கள்? விஜயும் திரிஷாவும் நல்ல நண்பர்களாக இருக்கக் கூடாதா? ஒரு திருமணத்திற்கு ஒரே மாதிரி உடை அணிந்து ஒன்றாக செல்வதில் என்ன தவறு? ஆண் பெண் நட்பு என்பதே இருக்கக் கூடாதா? நாம் இன்னும் எந்த காலத்தில் இருக்கிறோம்? ஒரு நட்பை தேவையற்ற முறையில் கொச்சைப்படுத்த வேண்டாம்.

அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பற்றி பேசுவது தேவையற்றது. மனைவி குழந்தைகளை பார்க்காதவர் எப்படி நாட்டையும் நாட்டு மக்களையும் பார்ப்பார் என்று கேட்பதும் தேவையில்லை. நடிகர் கமல் அரசியலுக்கு வந்த போதும் இப்படித்தான் விமர்சனம் வந்தது. அவர்கள் குடும்பத்தை பார்க்கிறார்களா பார்க்கவில்லையா என்பதல்ல, நாட்டிற்கு என்ன செய்யப் போகிறார்கள் என்பதையே நாம் பார்க்க வேண்டும் என்று நடிகை ஷகிலா பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்