- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்ஜிஆருக்கு ஒரு ஜெயலலிதா போல, தமிழக வெற்றிக் கழகம் விஜய்க்கு இவர்தான் கொபசெ; எப்படி எல்லாம்...

எம்ஜிஆருக்கு ஒரு ஜெயலலிதா போல, தமிழக வெற்றிக் கழகம் விஜய்க்கு இவர்தான் கொபசெ; எப்படி எல்லாம் கிளப்பி விடறாங்க? – ஆனா நடக்கவும் வாய்ப்பிருக்கு!

- Advertisement -

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்தாலும் தொடர்ந்து நடிப்புத்துறையில் நீடிக்க விரும்பாமல், அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கியுள்ள அவர், செப்டம்பர் மாதம் திருச்சியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். இதில் 10 லட்சம் பேர் வரை பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இதுவரை பிரபல நடிகர்களாக இருந்த பலரும் அரசியலுக்கு வந்திருக்கின்றனர். ஆனால் ஜெயித்தவர்கள் 3 பேர் மட்டும்தான். ஆனால் அவர்களில் 3 பேருமே இப்போது உயிருடன் இல்லை. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதில் விஜயகாந்த் மட்டும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்திருந்தால், நிச்சயம் தமிழக முதல்வராக அதிக வாய்ப்புகள் இருந்தது.

நடிகர்கள் கே பாக்யராஜ், டி ராஜேந்தர், மன்சூர் அலிகான், கருணாஸ், சரத்குமார், நவரச நாயகன் கார்த்திக், நடிகர் கமல்ஹாசன், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என பலரும் அரசியலுக்கு வந்து பெரிய அளவில் வெற்றி பெறாமல் போனவர்கள்தான். சரத்குமார், கமல்ஹாசன், கருணாஸ் போன்றவர்கள் அரசியல் களத்தில் இருந்தாலும், அவர்களுக்கு வரவேற்பு இல்லை.

இந்த நிலையில், நடிகர் விஜய் அரசியல் வருகை நிச்சயம் தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் நடிகை திரிஷாவும் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவும், அவருக்கு தவெக கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி காத்திருப்பதாகவும், இதுகுறித்து விஜய் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசித்து விட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

கில்லி, ஆதி, குருவி, திருப்பாச்சி, லியோ உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் திரிஷா. கில்லி படத்தில் நடித்ததில் இருந்தே விஜய்க்கும், திரிஷாவுக்கும் நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. லியோ படத்தில் விஜய்க்கு லிப்லாக் முத்தம் கொடுத்து, திரிஷா அதை நிரூபித்தார். விஜய் வசிக்கும் நீலாங்கரை பகுதியில் திரிஷாவுக்கும் சொந்தமான பங்களா வீடு இருக்கிறது. சமீபத்தில் ரூ. 25 கோடியில் விஜய் விலைக்கு வாங்கிய அலுவலகம் இருக்கும் ஆர்ஏ புரம் அபார்ட்மெண்டிலும், திரிஷா ரூ. 17 கோடியில் வீடு வாங்கியிருக்கிறார்.

இந்த சூழலில், அதிமுகவில் எம்ஜிஆருக்கு எப்படி செல்வி ஜெயலலிதாவோ, அதே போல் தவெக கட்சியில், விஜய்க்கு செல்வி திரிஷா தான் கொள்கை பரப்பு செயலாளர் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. திரிஷா விரைவில் விஜய் கட்சியில் இணையும் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி எந்த படத்திலும் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடாத திரிஷா, தி கோட் படத்தில் விஜய் உடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்