- Advertisement -
Homeபொழுதுபோக்குமாணவர்களும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரணும், நாட்டுக்கு ரொம்ப தேவையாக இருப்பது அதுதான் - கல்வி விருது...

மாணவர்களும் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரணும், நாட்டுக்கு ரொம்ப தேவையாக இருப்பது அதுதான் – கல்வி விருது வழங்கும் விழாவில் நடிகர் விஜய் பரபரப்பு பேச்சு

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் துவக்கியிருக்கிறார். கடந்தாண்டை போலவே, இந்த ஆண்டும் 10்ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில், தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுடன், கல்வி விருது சான்றிதழ் வழங்கும் விழா, இன்று சென்னையில் நடந்து வருகிறது.

இன்றும், வருகிற 3ம் தேதியும் இரண்டு கட்டங்களாக இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் கலந்துக்கொண்ட விஜய்க்கு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அவர்களது பெற்றோருடன் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர். மீதம் உள்ளவர்களுக்கு இதே போல் வருகிற 3ம் தேதி விழா நடத்தப்பட்டு, ரொக்க பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட உள்ளது.

- Advertisement -

இவ்விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது, எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் நமது முழு உழைப்பை வெளிப்படுத்தினால் வெற்றி நிச்சயம். உங்கள் எதிர்காலம் குறித்து பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்களிடம் ஆலோசனை கேளுங்கள். எந்த துறையை தேர்வு செய்தாலும், அதில் தேவை எப்படி உள்ளது என்பதை பார்க்க வேண்டும். அது மிகவும் முக்கியம்.

மருத்துவம், பொறியியல் மட்டுமே நல்ல துறைகள் என்பதல்ல. உலகத் தரத்தில் நம்மிடம் டாக்டர்கள், இன்ஜினியர்கள் நிறைய உள்ளனர். இங்கே நம்மிடம் என்ன இல்லை என்றால், இது இன்னும் நமக்கு அதிகமாக தேவைப்படுகிறது என்றால் நல்ல தலைவர்கள்தான் தேவை. நான் தலைவர்கள் என்று சொல்வது அரசியல் ரீதியாக மட்டுமல்ல.

- Advertisement -

நீங்கள் எந்த துறைக்கு சென்றாலும், அங்கு சிறப்பாக செயல்பட்டு உங்களால் ஒரு தலைமை இடத்துக்கு வர முடியும். அதைத்தான் நான் சொல்கிறேன். நமக்கு இன்னும் அதிகமான தலைவர்கள் தேவைப்படுகின்றனர் என்று. அதுமட்டுமின்றி எதிர்காலத்தில் அரசியலும் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக ஏன் வரக்கூடாது என்பதுதான் என் கேள்வி. அப்படி வர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.

நல்லா படிச்சவங்க, அரசியலுக்கு வரணுமா, வேண்டாமா என்பதை உங்களிடமே கேட்கிறேன். நல்லா படிச்சவங்க, அரசியல் தலைவர்களாக வரணுமா, வேண்டாமா, ஆனால் உங்கள் ஆர்வம் புரிகிறது. இப்போதைக்கு நன்றாக படியுங்கள். பின்னர், அதை எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று பேசியிருக்கிறார் நடிகர் விஜய்.

- Advertisement -

சற்று முன்