- Advertisement -
Homeபொழுதுபோக்குசட்டசபையில் வழக்கம் போல திமுகவை வசைபாடிய தமிழக முதல்வர் விஜய் - எங்களை பத்தி...

சட்டசபையில் வழக்கம் போல திமுகவை வசைபாடிய தமிழக முதல்வர் விஜய் – எங்களை பத்தி எப்பவுமே பேசவே மாட்டாரா? அப்செட் ஆன தமிழக மக்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து அரசியலுக்குள் வந்தவர் விஜய், தவெக கட்சியை 2024ம் ஆண்டில் துவங்கிய அவர் 2 மாதங்கள் 3 மாதங்களில் தமிழக சட்டசபை தேர்தலை தனித்து சந்தித்து 108 இடங்களில் மக்கள் ஆதரவால் வெற்றி பெற்றார். பிறகு திமுக கூட்டணியில் போட்டியிட்ட வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளார்.

இந்நிலையில் சட்டசபையில் நடந்து வரும் கூட்டத்தொடரில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான கேள்விகள் புகார்கள் குற்றச்சாட்டுகளுக்கு திங்கட்கிழமை அன்று பதில் அளிப்பதாக கடந்த வியாழன் அன்று முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவித்தார். மேலும் நான் பேசும்போது யாரும் எழுந்து வெளியே ஓடக்கூடாது என்றும் நக்கலாக பேசியிருந்தார்.

- Advertisement -

வெள்ளி சனி ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறை இடைவெளிக்கு பிறகு இன்று தமிழக சட்டசபை கூடியது. அப்போது பேசிய முதல்வர் விஜய், வழக்கம் போல எழுதி கொண்டு வந்த தாள்களில் இருந்ததை வாசிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் அதில் திமுக குறித்தும் கடந்த கால திமுக ஆட்சி குறித்தும் விமர்சனம் செய்தார்.

பேச பேச ஒருகட்டத்தில் முதல்வர் விஜய் ஆவேசமானார். சட்டசபையில் நாகரிகமாக பேச வேண்டும், பெண்களை பற்றி அவதூறாக பேசக்கூடாது டபுள் மீனிங்கில் பேசக்கூடாது என்றெல்லாம் பேசிய அவர், திமுக பற்றி தெரியாதா, மிசா பற்றி தெரியாதா என்று கூறி திமுக குறித்து கண்ணதாசன் பேசியதை எல்லாம் விஜய் குறிப்பிட்டு ஆவேசமாக பேசினார்.

- Advertisement -

பிறகு அமலாக்கத்துறை தரப்பில் திமுக மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இடைவெளி விடாமல் பேசிக்கொண்டே இருந்த விஜய் ஒரு கட்டத்தில் உச்சஸ்தாயில் கத்துவது போல பேசத் துவங்கி விட்டார். ஒரு மாண்புமிகு முதல்வர் சட்டசபையில் இன்று கத்துவது போலவோ உச்சஸ்தாயிலோ பேச வேண்டிய அவசியமே இல்லை. இதைப் பார்த்து அங்கிருந்த எம்எல்ஏக்களே அதிர்ந்து போய்விட்டனர். சபாநாயகர் விஜயை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதை நேரலையில் காண முடிந்தது.

மேலும் சும்மாவே காட்டு காட்டுன்னு நான் காட்டுவேன். என்னை பைஃலை திறந்து காட்டு காட்டுன்னு சொன்னா என்றும் தன்னையே பெருமிதமாக நக்கலாக ஒரு பஞ்ச் டயலாக் பேசினார். சட்டசபை என்பது மக்களின் எதிர்கால நலனுக்காக மக்கள் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து பேசும் ஒரு இடம். அதில் முதல்வராக இருக்கும் விஜய் இப்படி கத்திப் பேசுவதும் பஞ்ச் டயலாக் பேசுவதும் திமுகவை வசைபாடுவதும் இன்னும் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டை மறக்கவில்லையா? என்று கேட்க தோன்றுவதாக பலரும் இணையத்தில் விமர்சித்துள்ளனர். அதே நேரத்தில் மக்களை பத்தி விஜய் எதுவும் பேசவே மாட்டாரா என்றும் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்