இந்திய அளவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்று பெருமைக்கு சொந்த்ககாரர் இயக்குனர் கே பாக்யராஜ். ஆரம்பத்தில் அவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் ஸ்கிரிப்ட் ரைட்டர் பணிக்காக உதவியாளராக சேர்ந்தார். பிறகு அவரது திறமையை பார்த்து வியந்து போன பாரதிராஜா உதவி இயக்குனராகவும் ஒரு கட்டத்தில் தனது புதிய வார்ப்புகள் படத்தில் அவரையே ஹீரோவாகவும் மாற்றினார். இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் வசனகர்த்தாவும் கே பாக்யராஜ் தான்.
சுவரில்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குனராக மாறிய கே பாக்யராஜ், அவர் இயக்கிய படங்களில் பெரும்பாலும் அவரே ஹீரோவாக நடித்தார். அதிலும் அந்த 7 நாட்கள் படம் யாராலும் மறக்க முடியாது. பாலக்காட்டு மாதவன் கேரக்டரில் கே பாக்யராஜ் வாழ்ந்திருந்தார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் இன்றும் சிலாகித்து பேசப்படுகிறது.
ஆனால் இதே விதமான கிளைமாக்ஸ் கே பாக்யரராஜ் திரைக்கதை வசனம் எழுதிய புதிய வார்ப்புகள் படத்திலும் வருகிறது. ஆனால் 2 படங்களின் முடிவுகளும் முரண்பட்டதாக உள்ளது. ஒரு படத்தில் உங்க காதலி எனக்கு மனைவியாக முடியாது என்று சொல்லும் ஹீரோ, இன்னொரு படத்தில் இன்னொருவர் மனைவியை தனது காதலியாக ஏற்றுக்கொள்கிறான்.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் நட்டி நடராஜ் கூறியதாவது, ஒரு திறமையான எழுத்தாளராக கே பாக்யராஜால் மட்டுமே இப்படி செய்ய முடியும். அவருக்கு மட்டுமே இது சாத்தியப்படும். சர்வ சாதாரணமாக ஒருவரால் இப்படி எழுதி விட முடியாது.
புதிய வார்ப்புகள் படத்துல உனக்கு நான் இதை தாலியாக கட்டலேம்மா, சுருக்கு கயிறா தான் கட்டினேன். நான் கட்டுன இந்த கயித்தை நானே கழட்டிடறேன். நீ ஆசைப்பட்டவனோடு போய் வாழு என்று ரதியிடம் அவரது கணவர் கவுண்டமணி சொல்லி பாக்யராஜூடன் சேர்ந்து வாழச் சொல்கிறார்.
ஆனா அதே மாதிரி ஒரு கிளைமேக்ஸ்ல என்னோட காதலி உங்க மனைவி ஆகலாம். ஆனா உங்க மனைவி எனக்கு காதலி ஆக முடியாதுன்னு பாக்யரராஜ் மறுத்து பேசி இது ஓல்டுதான் ஆனால் கோல்டு என்று சொல்லி அதை ஏத்துக்க மாட்டார். இப்படி ஒரே விதமான கிளைமாக்ஸ்க்கு 2 விதமான முடிவுகளை எழுதி பாக்யராஜ் சார் ஒருவரால் மட்டுமே முடியும் என்று நடிகர் நட்டி நடராஜ் கூறியிருக்கிறார்.





