- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜர்பைஜானில் அஜித்தை மீட் பண்ண வெங்கட் பிரபு... ஆயிரம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்... ஒருவேளை அதுவா...

அஜர்பைஜானில் அஜித்தை மீட் பண்ண வெங்கட் பிரபு… ஆயிரம் கேள்வி கேட்கும் ரசிகர்கள்… ஒருவேளை அதுவா இருக்குமோ…

- Advertisement -

இயக்குனர் மற்றும் இசையமைப்பாளரான கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். குறிப்பாக ஜி திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் தோல்வியுடன் வெளியேறினார்.

 

இப்படியான சூழலில் தான் திரைத்துறையில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியில் இயக்குனர் அவதாரம் எடுத்தார் வெங்கட் பிரபு. இதில் அவரின் முதல் திரைப்படமாக அமைந்தது சென்னை 600028. மாநகரில் வாழும் இளைஞர்களின் காதல், பாசம், நட்பு, பிரிவு என அனைத்தையும் கலந்து கட்டி அதில் கிரிக்கெட்டையும் புகுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

இதனைத் தொடர்ந்து தனக்கான வழியை சரியாக தேர்வு செய்த வெங்கட் பிரபு, அதில் சக்சஸ் புல்லாக பயணிக்க ஆரம்பித்தார். இருப்பினும் வெங்கட் பிரபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது மங்காத்தா திரைப்படம் தான். அஜித்தின் 50-வது திரைப்படமாக அது உருவாக, அதனை இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்தது.

 

ஒரு மாசான அதே சமயத்தில் மஜாவான கமர்சியல் எலமெண்டுகளை தூவி, அதிலும் கிளைமாக்சை அஜித் ரசிகர்களுக்காகவே உருவாக்கி பட்டையை கிளப்பினார் வெங்கட் பிரபு. இந்த திரைப்படம் வெங்கட் பிரபுவுக்கு, இரு மடங்கு ஏணியை போட்டு கொடுத்து அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி விட்டது.

 

தொடர்ந்து சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மாநாடு திரைப்படங்கள் மூலம் அவர் வெற்றியை பதிவு செய்தார். தற்போது அவர் விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். செப்டம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இது டைம் ட்ராவல் கான்செப்ட் என்பதால் ரசிகர்களுக்கு ஏராளமான சுவாரசிய நிகழ்வுகளை வெங்கட் பிரபு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் அவர் தற்போது அஜித்தை சந்தித்திருக்கிறார். அதுவும் அஜர்பைஜான் நாட்டில் உள்ள பகு என்னும் இடத்தில் அவரை பார்த்திருப்பதாக, பதிவிட்டுள்ளார். இருவரின் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதே சமயம் எதற்காக இங்கு சந்திப்பு நடைபெற்றது என்று சொல்லப்படவில்லை. ஒருவேளை கோட் திரைப்படத்தில் அஜித் கேமியோ ரோலில் வந்திருப்பாரோ என்றும் ஒரு தரப்பு கேள்வி எழுப்பி வருகிறது. அதேசமயம் மீண்டும் இந்த கூட்டணி இணைய போவதாகவும் பேசப்பட்டு வருகிறது.

 

சற்று முன்