- Advertisement -
Homeபொழுதுபோக்குஅபிஷேக் பச்சனை பிரிந்து விட்டாரா ஐஸ்வர்யா ராய்? அம்பானி இல்ல திருமண விழாவில் வெடித்தது சர்ச்சை...

அபிஷேக் பச்சனை பிரிந்து விட்டாரா ஐஸ்வர்யா ராய்? அம்பானி இல்ல திருமண விழாவில் வெடித்தது சர்ச்சை – இப்படி இருந்தா யாருக்கு தான் சந்தேகம் வராது?

- Advertisement -

உலக அழகியாக பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராய், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு செலிபரட்டியாக இருக்கிறார். தமிழில் ஜீன்ஸ், எந்திரன், பொன்னியின் செல்வன், ராவணன், இருவர், கண்டுக்கொண்டேன் கண்டுக் கொண்டேன், குரு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது.

நடிகை ஐஸ்வர்யா ராய், பாலிவுட் சீனியா் நட்சத்திர தம்பதி அமிதாப் பச்சன் – ஜெயா பச்சன் மகன், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த ஓராண்டு காலமாக, அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் இருவரும் தனித்தனியாக வீடுகளில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக மாமியார் ஜெயா பச்சனுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே பலத்த மன வேறுபாடும், கசப்பும் நீடிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன், அமிதாப் பச்சன் அணிவித்திருந்த மோதிரத்தை ஐஸ்வர்யா ராய் கை விரல்களில் காணவில்லை என்றும், மகள் ஆராத்யாவுக்காக மட்டுமே இருவரும் நிரந்தர பிரிவை அறிவிக்காமல் இருக்கின்றனர். இல்லை என்றால் விவாகரத்தை அவர்கள் தானாகவே அறிவித்திருப்பார்கள் என்றும் பரபரப்பான தகவல்கள், சமூக வலைதளங்களில் பரவியது.

- Advertisement -

ஆனால் அந்த பிரச்னைகளெல்லாம் சில நாட்களில் அடங்கிய நிலையில், இப்போது மீண்டும் ஒரு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மும்பையில் முகேஷ் அம்பானி இல்லத்தில் அவரது மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண விழா நடந்து வருகிறது. இதில் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள், இந்திய தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்துக்கொண்டுள்ளனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் பங்கேற்றிருக்கிறார்.

இந்நிலையில் இந்த திருமண விழாவுக்கு நடிகர் அபிஷேக் பச்சன், அவரது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன், மகள் ஸ்வேதா உள்ளிட்ட குடும்பத்தினர் முதலில் வந்து கலந்துக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். அதன்பிறகு திருமண அரங்குக்குள் அவர்கள் சென்ற பிறகு தன் மகள் ஆராத்யாவுடன் அங்கு தனியாக வந்த ஐஸ்வர்யா ராய், மகளுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். இதன்மூலம் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் பிரிவு குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்