- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை நேரில் சந்திக்க நீங்க விரும்பறீங்களா? அப்போ அதை எடுத்துட்டு வாங்க - பிரபல நடிகை...

என்னை நேரில் சந்திக்க நீங்க விரும்பறீங்களா? அப்போ அதை எடுத்துட்டு வாங்க – பிரபல நடிகை கங்கனா ரெனாவத் எம்பி போட்ட திடீர் கண்டிஷன்

- Advertisement -

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரெனாவத். இந்தியில் பிரபல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக தலைவி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம். இதில் ஜெ கேரக்டரில்தான், கங்கனா ரெனாவத் நடித்திருந்தார்.

அதற்கு முன்பாக, ஜெயம் ரவியுடன் தாம் தூம் என்ற படத்தில் நடித்துள்ளார். கடந்தாண்டில் வெளியான சந்திரமுகி 2 படத்திலும் கங்கனா ரெனாவத் நடித்திருந்தார். தமிழில் 3 படங்களில் நடித்தும் தலைவி படம் மட்டுமே கங்கனா ரெனாவத் நடிப்புக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. மற்ற 2 படங்களும் சரியாக போகவில்லை.

- Advertisement -

இதற்கிடையே கங்கனா ரெனாவத், அடிக்கடி சர்ச்சையான விஷயங்களில் கருத்தை சொல்லி, விமர்சனங்களில் சிக்கிக்கொள்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். குறிப்பாக சினிமா அமைப்புகள் வழங்கும் விருதுகள் குறித்து இவர் கடுமையாக விமர்சிப்பார். தனக்கு அறிவித்த விருதுகளை கூட வேண்டாம் என்று மறுத்து விமர்சனங்களில் சிக்கிக்கொள்வது அவரது வழக்கம்.

சமீபத்தில் நடந்துமுடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில், இமாச்சல பிரதேசம், மாண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு கங்கனா ரெனாவத் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை பல ஆயிரம் ஓட்டுகளில் வித்யாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும், தேர்தல் முடிவு வெளியான சில தினங்களில் பஞ்சாப் மாநிலம் சண்டிகர் விமான நிலையத்துக்கு சென்ற கங்கனா ரெனாவத்தை அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர், கன்னத்தில் அறைந்தது நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை இழிவுபடுத்தி விமர்சித்து பேசியதற்காக, கங்கனாவை அறைந்ததாக அந்த பெண் போலீசார் கூறியிருந்தார்.

கங்கனா ரெனாவத் விரைவில் அமைச்சராக வாய்ப்புள்ளதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படும் நிலையில், தன்னை சந்திக்க வருபவர்களுக்கு புதிய நிபந்தனைகளை அவர் விதித்துள்ளார். இமாச்சல பிரதேசத்துக்கு நிறைய சுற்றுலா பயணிகள் வருவதால், என்னை பார்க்க வரும் தொகுதி மக்கள் கட்டாயம், கையில் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும். தொகுதி மக்கள் மாண்டி அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம். மாநில மக்கள் மணாலியில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கலாம். அதற்கு முன்பே வருகையின் நோக்கம் முன்பே தெரிவிக்க வேண்டும். நேர விரயம், கூட்ட நெரிசலை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என, கங்கனா ரெனாவத் அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்