- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னால அதுவரைக்கும் காத்திருக்க முடியாது - இந்தியன் 2 படம் பார்த்த டைரக்டர் லோகேஷ்...

என்னால அதுவரைக்கும் காத்திருக்க முடியாது – இந்தியன் 2 படம் பார்த்த டைரக்டர் லோகேஷ் கனகராஜ் வைத்த வித்யாசமான கோரிக்கை

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 12ம் தேதி இந்தியன் 2 படம் வௌியானது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில், இந்தியன் தாத்தா சேனாபதி கேரக்டரில் மீண்டும் கமல்ஹாசன் நடித்திருந்தார். நடிகர்கள் சித்தார்த், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், ஏஐ தொழில்நுட்பத்தில் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

கடந்த 1996ம் ஆண்டில் வெளிவந்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக இந்த படம் வெளியானதால், மிகப்பெரிய அளவில் ஷங்கரும், கமலும் இணைந்து அசத்தியிருப்பார்கள். இந்தியன் படத்தை போலவே இதுவும் வேற லெவலில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் முற்றிலும் மாறாக, நேர் எதிராக இந்தியன் 2 படம் ஷங்கர் படமாகவும் இல்லாமல், கமல் படமாகவும் இல்லாமல் இது ஒரு படமா, என்று ரசிகர்களை கதறவிடும் அளவுக்கு ஒரு மோசமான படத்தை கமல், ஷங்கர் கூட்டணி உருவாக்கி விட்டதாக, ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதுவும் இந்தியன் படத்தில் ஏஆர் ரகுமானின் இசையும், சுஜாதாவின் கூர்மையான வசனங்களும், கதையும், திரைக்கதையும் படத்தின் ஒவ்வொரு காட்சியும் செதுக்கி வைத்தது போல விறுவிறுப்பாக, ரசிக்கும்படி இருந்தது. இந்த படம் ஆரம்பம் முதல் இறுதிவரை எதுவுமே புரியவில்லை என்றும் ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

ஆனால் படம் பார்த்த திரைத்துறை சார்ந்த சிலர், ஷங்கர் மற்றும் கமல் மனம் வருந்தும்படி படத்தை தவறாக விமர்சித்துவிடக் கூடாது என்பதற்காக இந்தியன் 2 சூப்பர் படம், மிகப்பெரிய அளவில் எடுத்துள்ளனர் என்று பொய்யாக பாராட்டி வருகின்றனர். ரோபோ சங்கர், வையாபுரி, கார்த்திக் சுப்பராஜ் வரிசையில் இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் இணைந்துவிட்டார்.

இந்தியன் 2 படம் குறித்த தனது பதிவில், கலை மீது கமல் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறார் என்பதற்கு இந்தியன் 2 மிகப்பெரிய சாட்சி. பிரமாண்ட படைப்பை தந்துள்ளார் இயக்குனர் ஷங்கர். அனிருத் இசை சிறப்பாக உள்ளது. இந்தியன் 3 படத்துக்காக காத்திருக்க முடியவில்லை என்றும் அதில் கூறியிருக்கிறார். அதனால் லோகேஷ் கனகராஜ் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இந்தியன் 3 படத்தை உடனே ரிலீஸ் செய்யுங்கள் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்