தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான இயக்குனரின் சங்கர் இயக்கத்தில் வெளியான “இந்தியன் 2” திரைப்படமானது வசூல் ரீதியாக சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. அதோடு விமர்சன ரீதியாகவும் அந்த படமானது தற்போது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளதால் இந்த படம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இதுவரை உலக அளவில் நான்கு நாட்களில் 130 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்தாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3, கேம் சேஞ்சர் என அடுத்தடுத்து சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படங்கள் வெளிவர உள்ளது. அதேபோன்று சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் வேட்பாறி படத்தை எடுக்கப் போவதாகவும் சங்கர் கூறியிருந்தார்.
அதேபோன்று “இந்தியன் 2” இசை வெளியீட்டு விழாவின் போது தனது மகள் நடனாடியதை தொடர்ந்து அவர்மீது விமர்சனங்கள் எழுந்த வேளையில் அவரை தனது படத்தில் நடிக்க வைப்பது குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் சங்கர் வெளிப்படையாக சில விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அந்த வகையில் உங்களது படத்தில் அதிதி சங்கரை எப்போது பார்க்கலாம்? என்ற கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதற்கு பதிலளித்த சங்கர் கூறுகையில் : கண்டிப்பாக பார்க்கலாம் அவருக்கு என்று ஒரு கதாபாத்திரம் தயாராக இருக்கிறது. ஒரு தந்தையாக இல்லாமல் எனக்குள் இருக்கும் இயக்குனர் தான் அதிதியிடம் இருக்கும் நடிகைக்கான அம்சங்களை பார்த்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் நிச்சயம் என் படத்தில் அவர் நடிப்பார் கூடிய விரைவில் அது நடக்கும் என்றும் அவருக்கான கதாபாத்திரம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாகவும் சங்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.





