தமிழ் சினிமாவிற்கு தற்போது போதாத காலம் என்று தான் கூற வேண்டும். முக்கிய நட்சத்திரங்கள் நடித்த பெரும்பாலான பெரிய திரைப்படங்கள் அனைத்துமே, ரிலீஸ் தேதியில் தாமதத்தை காட்டி வருகின்றன. இதனால் ரசிகர்கள், கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதில் குறிப்பாக விக்ரமின் தங்கலான் திரைப்படத்தைக் கூறலாம். கடந்த ஜனவரி மாதமே இந்த படம் வெளியாவதாக இருந்தது. தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. பிறகு அது மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தள்ளி வைக்கப்பட்டு தற்போது வரை ரிலீசாகவில்லை. படத்தின் டிரைலர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
இன்னும் தங்கலான் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதே போல் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும், ஆகஸ்ட் மாதம் தான் வெளியாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டு, அக்டோபர் 31 அதாவது தீபாவளி என்று படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இதே போல் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் தள்ளிப் போய்க் கொண்டே தான் இருக்கிறது. எப்போது எப்போது என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த சூழலில், அக்டோபர் மாதம் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு, கங்குவாவில் இருந்து முதல் பாடல் ரிலீஸ் ஆகிறது.
இதனிடையே விஜய்யின் கோட் திரைப்படமும் தள்ளிப் போய் விடுமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். செப்டம்பர் 5ஆம் தேதி இந்த திரைப்படம் ஏற்கனவே, படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் அறிவித்திருந்தது. இந்நிலையில், படம் வெளியாக இன்னும் 48 நாட்களை இருப்பதால் அப்டேட்டுகளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது, வி எஃப் எக்ஸ் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார் வெங்கட் பிரபு. வெளிநாடுகளில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என்று திரைத்துறை வட்டாரத்தில் உறுதியாக கூறப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் வரும் நாட்களில், கோட் படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





