- Advertisement -
Homeபொழுதுபோக்குதேர்தல் பிரசார வாகனத்தில் விஜயின் உருவ பொம்மைகள், விஜயின் டூப் உருவங்கள் - கடுமையாக விமர்சித்த...

தேர்தல் பிரசார வாகனத்தில் விஜயின் உருவ பொம்மைகள், விஜயின் டூப் உருவங்கள் – கடுமையாக விமர்சித்த இயக்குனர் சேரன்!

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டுப் பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், நடிகர் விஜய் சென்னை திருச்சி புதுச்சேரி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் பல மாவட்டங்களில் அவருக்கு பிரசாரம் செய்ய கடும் நிபந்தனைகளை விதித்து போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் அவரது தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்படுகிறது.

அதனால் பல வேட்பாளர்கள், நமக்காக பிரச்சாரம் செய்ய தொகுதிக்கு தலைவர் விஜய் வர மாட்டார், அவர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று வேட்பாளர்கள் பலரும் தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். அதனால் அவரை மக்கள் மத்தியில் காட்டி ஓட்டு கேட்க வழி தெரியாமல் இப்போது விஜய் போன்ற ஒரு உருவ பொம்மையை காட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.

- Advertisement -

பிரசார வாகனத்தில் அந்த கட் அவுட்டை பொம்மையை நிற்க வைத்து அதனுடன் வந்து வீதி வீதியாக ரோடு ரோடாக வந்து பிரச்சாரம் செய்கின்றனர். இன்னும் சிலர் விஜய் போன்ற தோற்றத்தில் ஒருவரை அவர் போல மேக்கப் போட்டு அதே கெட்டப்பில் கூட்டி வந்து விஜய் போல நிற்க வைத்து பிரசாரம் செய்கின்றனர். இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது

இந்நிலையில் நடிகர் விஜய் பொம்மையை வைத்து பிரசாரம் செய்யும் ஒரு வீடியோவை பகிர்ந்து இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தனது விமர்சனத்தை செய்திருக்கிறார். அதுகுறித்து சேரன் தனது பதிவில் கூறியிருப்பதாவது, ஒரு தலைவர் சந்திக்கும் முதல் தேர்தல். இந்த பரப்புரை (பிரசாரம்) நிலை சரிதானா? இந்நேரம் அந்த தலைவர் அனைத்து தொகுதிகளிலும் பம்பரமாக சுற்றி இருக்க வேண்டாமா? அதை விடுத்து திருவிழாவில் போட்டோ எடுக்க நடிகர்கள் கட் அவுட் வைத்திருப்பது போல் விஜயின் டூப் வேனில் வருவது எவ்வளவு பெரிய அவமானம், அந்த தலைமைக்கு?

- Advertisement -

நாளை சட்டசபைக்குள் இப்படி எத்தனை பேர் அமரப் போகிறார்கள்? நான்கு தேர்தல்களை சந்தித்து தொடர்ந்து தோல்விகளை சந்தித்தபோதும் தவறாமல் ஒரு மனிதன் தன் கொள்கைக்காக கட்சிக்காக மக்கள் மாறுவார்கள் என நம்பிக்கை வைத்து கொட்டும் மழையிலும், நிறுத்தாமல் பிரச்சாரம் செய்கிறார் அவர்தான் சீமான். அந்த தலைவன் எங்கே? முதல் தேர்தலிலேயே தனக்கு பதிலாக டூப்பை பயன்படுத்த அனுமதி தரும் தலைமை எங்கே?

சிந்தியுங்கள் மக்களே. நீங்கள் யார் வேண்டுமா வேண்டாமா எனக் கேட்டு ஸ்டாலின் அவர்களே இந்த வயதில் இறங்கி நடந்து பிரச்சாரம் செய்கிறார். ஆனால் நீங்கள் ஒரு மணி நேரம் தான் அனுமதி என காரணம் சொல்லி பிரசாரத்தை ரத்து செய்கிறீர்கள். இப்போது சொல்லுங்கள் மக்களே, நிஜப்போட்டி திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தானே என்று இயக்குனர் சேரன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்