- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் பிரபலம் கவிஞர் சினேகன் எடுத்த புதிய அவதாரம், என்ன ப்ரோ, கடைசியில் நீங்களும் இங்க...

பிக்பாஸ் பிரபலம் கவிஞர் சினேகன் எடுத்த புதிய அவதாரம், என்ன ப்ரோ, கடைசியில் நீங்களும் இங்க வந்துட்டீங்களே…? – ஆனா பாட்டு எழுதறதை மறந்துடாதீங்க…!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல பாடலாசிரியர்கள் குறைவாக தான் இருக்கின்றனர். அதிலும் சில கவிஞர்கள், இசையமைப்பாளர்களுடன் முரண்பட்டு நிற்பதால் அந்த இசையமைப்பாளர்களின் படங்களில் அவர்கள் பாட்டு எழுதுவதில்லை. உதாரணமாக இளையராஜா – வைரமுத்து பகையால் ஆயிரக்கணக்கான நல்ல பாடல்கள், ரசிகர்களுக்கு கிடைக்காமலேயே போய்விட்டது.

சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் இசையமைப்பது மட்டுமின்றி, பாடல்களும் எழுதுகின்றனர். நடிகர்களும், இசையமைப்பாளர்களும் பாடவும் செய்கின்றனர். அதனால் கவிஞர்களுக்கும் பாட்டு எழுதும் வாய்ப்பு குறைகிறது. பல பாடகர்களுக்கு பாட்டு பாடவும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிக நல்ல பாடல்களை எழுதிய கவிஞர்களில் மிக முக்கியமானவர் சினேகன். குறிப்பாக அவர் எழுதிய ஞாபகம் வருதே ஞாபகம் வருதே என்ற ஆட்டோகிராப் பாடலும், கழுகு படத்தில் அவர் எழுதிய ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் போன்ற பாடல்கள் எல்லாம் மிகவும் ரசிக்கத்தக்கவையாக இருக்கின்றன. இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில், 600க்கும் மேற்பட்ட பாடல்களை கவிஞர் சினேகன் எழுதியிருக்கிறார்.

கவிஞர் சினேகன், விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிய போது, முதல் சீசனிலேயே போட்டியாளராக கலந்துக்கொண்டார். இறுதி வரை பல டாஸ்க்குகளில் வெற்றி பெற்று, இறுதி வரை டைட்டில் வின்னர் வெறறிக்காக போராடினார். ஆனால் ஆரவ் வின்னராக அறிவிக்கப்பட்டு, சினேகன் ரன்னராக இரண்டாமிடத்தை பிடித்தார்.

- Advertisement -

அதன்பிறகு தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துக்கொண்ட கவிஞர் சினேகன், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருப்பதால் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்து கட்சி பணியிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அடிக்கடி தனது மனைவியுடன் வெளியிடங்களுக்கு செல்லும் புகைப்படங்கள், வீடியோக்களை சினேகன் அப்டேட் செய்து வருகிறார்.

இந்நிலையில் கவிஞர் சினேகன், டிவி சீரியல் ஒன்றில் நடிப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும் ஆகிய சீரியல்களை இயக்கியவர் இயக்குனர் பிரியன். அவரது இயக்கத்தில் புதிய சீரியலில் கவிஞர் சினேகன், அனிதா சம்பத் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். கலைஞர் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ள இந்த சீரியலுக்கு பவித்ரா என பெயரிடப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்