தமிழ் சினிமா நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திர நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ஒரு படத்தில் நடிக்க 10 கோடி ரூபாய் முதல் 12 கோடி ரூபாய் வரை நடிகை நயன்தாரா சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மொழியிலும் நயன்தாராவுக்கு பெரிய வரவேற்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாராவின் மற்றொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் சினிமாவில் விளம்பரங்களில் நடித்து சம்பாதித்த பணத்தை எல்லாம் வணிகத்தின் முதலீடு செய்து அதை பல மடங்காக பெருக்கும் வியாபார தந்திரமும் அவருக்கு நிறைய இருக்கிறது.
அதனால் தனது சினிமா மற்றும் விளம்பரங்களில் நடிக்கும் வருமானத்தை அவர் பல தொழில்களின் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதித்து வருகிறார். இது பல நடிகைகளிடம் இருப்பதில்லை. சம்பாதித்த பணத்தை ஆடம்பரங்களில் செலவு செய்துவிட்டு பிற்காலத்தில் சிரமப்படுகின்றனர். ஆனால் நயன்தாரா வருமானத்தை வைத்து பலமடங்கு வருமானம் பெருக்கி விடுகிறார்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு பின்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக நடிகை நயன்தாராவின் அபார்ட்மென்ட் வீடு கட்டுமான பணி நடந்து வந்தது. இப்போது அந்த வீட்டின் கட்டுமானப் பணி முடிவடைந்த நிலையில் விரைவில் போயஸ் கார்டன் அபார்ட்மென்ட் பங்களாவில் நடிகை நயன்தாரா குடியேற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இப்போது ஆடி மாதம் என்பதால் ஆடி மாதம் முடிந்த பிறகும் நடிகர் கவினுடன் அவர் நடித்துள்ள ஹாய் படமும் வெளியான பிறகு அவர் அந்த வீட்டுக்கு குடிபெயர இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஐந்து மாடிகள் கொண்ட அந்த அப்பார்ட்மெண்ட்டில் மேலே உள்ள இரண்டு போர்ஷன்களில் நடிகை நயன்தாரா குடியேற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போயஸ்கார்டன் மட்டுமின்றி சென்னை ஊட்டி துபாய் உள்ளிட்ட இன்னும் சில இடங்களில் நயன்தாராவுக்கு சொந்தமாக வீடுகள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் ஜெயலலிதா தனுஷ் சசிகலா உள்ளிட்டோரை தொடர்ந்து நடிகை நயன்தாராவும் விவிஐபிகள் நிறைந்த போயஸ்கார்டன் பகுதியில் குடும்பத்துடன் குடியேற இருப்பது குறிப்பிடத்தக்கது.





