- Advertisement -
Homeபொழுதுபோக்குசமந்தா, நயன்தாரா வரிசையில் அடுத்ததாக சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி - காலணி அணியாமல்...

சமந்தா, நயன்தாரா வரிசையில் அடுத்ததாக சர்ச்சையில் சிக்கிக்கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி – காலணி அணியாமல் இருப்பது ஒரு குத்தமாய்யா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் துவக்கத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இப்போது முக்கிய நடிகராக வலம் வருகிறார். சினிமா பட தயாரிப்பாளராகவும் விஜய் ஆண்டனி இருந்து வருகிறார். துவக்கத்தில் டிவியில் இசையமைப்பாளராக இருந்து பிறகு, சினிமாவில் இசையமைக்க வந்தவர் விஜய் ஆண்டனி.

டிஸ்யூம், காதலில் விழுந்தேன், நான் அவன் இல்லை போன்ற படங்களில் விஜய் ஆண்டனி இசை பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. நாக்கு முக்க பாடல், ஏனெனக்கு மயக்கம், ஏனெனக்கு தயக்கம், டைலாமோ டைலாமோ போன்ற பல பாடல்கள் விஜய் ஆண்டனி இசையில் பட்டிதொட்டி எங்கும் ஒலித்த டிரண்டிங் பாடல்களாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 2012ம் ஆண்டில் நான் என்ற படத்தில் நடித்த விஜய் ஆண்டனி, முதல் படத்திலேயே ரசிகர்களின் பலத்த வரவேற்பை, பாராட்டை பெற்றார். தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், திமிரு புடிச்சன், கொலைகாரன், அண்ணாதுரை, சைத்தான், இந்தியா பாகிஸ்தான், கோடியில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த விஜய் ஆண்டனி முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார்.

இதில் மில் அதிபராக இருந்துக்கொண்டு அம்மாவுக்காக பிச்சைக்காரனாக அவர் நடித்த பிச்சைக்காரன் படமும், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் கேரக்டரில் நடித்த திமிரு புடிச்சவன் படமும் விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் பிச்சைக்காரன் 2 படம் விஜய் ஆண்டனிக்கு வெற்றியை தரவில்லை.

இந்நிலையில், அவரது மகள் மீரா மறைவுக்கு பிறகு விஜய் ஆண்டனி கால்களில் காலணி, ஷூ என எதுவும் அணியாமல் பொது இடங்களுக்கு வருகிறார். ஷூட்டிங்கில் கலந்துக்கொள்கிறார். சமீபத்தில் மழை பிடிக்காத மனிதன் என்ற அவரது படம் ரிலீசாகி உள்ளது. அதன் பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் ஆண்டனியிடம் இதுகுறித்து தொகுப்பாளர் கேட்ட போது, செருப்பு அணியாமல் நடந்து பார்த்தேன், அப்படி நடப்பது பிடித்திருக்கிறது.

மனதுக்கு உத்வேகம் பெறவும், மனதில் ஒரு மாற்றம் வரவும், மனம் சோர்வு அடைந்த நேரங்களில் செருப்பு அணியாமல் நடந்து பாருங்கள், என்று கூறியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று, வைரலானது. இதற்கு பதிலளித்த டாக்டர் ஒருவர், கால்களில் செருப்பு அணியாமல் நடந்தால் அக்லோஸ்டோமோ குடற்புழுக்கள், குடலில் ரத்தத்தை உறிஞ்சி ரத்த சோகையை உருவாக்கும். ரத்த சோகையால், குழந்தைகள் இளம் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதனால் செருப்பு அணிவதே சிறந்தது. அரைகுறையாக தெரிந்துக்கொண்டு சிலர் சொல்வதை யாரும் நம்பி செருப்பு அணியாமல் இருக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார். இது தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

சற்று முன்