- Advertisement -
Homeபொழுதுபோக்குவெங்கட் பிரபுவுக்கு அடுத்து விஜயின் அடுத்த திரைப்படம் எது தெரியுமா?... முக்கியமான விஷயத்தை கையில் எடுப்பதால்...

வெங்கட் பிரபுவுக்கு அடுத்து விஜயின் அடுத்த திரைப்படம் எது தெரியுமா?… முக்கியமான விஷயத்தை கையில் எடுப்பதால் இப்போதே எகிறும் எதிர்பார்ப்பு…

- Advertisement -

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியான நிலையில், ஆரம்பத்தில் சுமாரான விமர்சனங்களே பெற்றன. குறிப்பாக படத்தில் இரண்டாம் பாதி மிக சுமாராகவே உள்ளது என்றும் பலர் கருத்து தெரிவித்தனர். இதனை லோகேஷ் கனகராஜும் ஒப்புக்கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் பிளாஷ்பேக் காட்சிகள் பொய் என்றும் அவர் கூறினார். இது ஒரு பக்கம் இருக்க லியோ படத்தின் விமர்சனம் அதன் வசூலை பாதிக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். படம் வெளியாகிய ஒரே வாரத்தில் 460 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பாளர் லலித் குமாரே அறிவித்தார். இதனால் உற்சாகமடைந்த படக்குழு, லியோ படத்தின் வெற்றி விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக கொண்டாடியது.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படத்தில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. புதிய கீதை படத்திற்கு பிறகு யுவன் சங்கர் ராஜா விஜய் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் படபூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி என இருவர் நடிக்கின்றனர். அதுபோக லைலாவும் படத்தில் இருக்கிறார். பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், பிரேம்ஜி அமரன், வைபவ், அஜ்மல், இவானா, யுகேந்திரன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இதில் இணைந்துள்ளன. தளபதி 68 வது திரைப்படமாக இது உருவாகிறது.

- Advertisement -

இதன் சூட்டிங் சென்னையில் நடைபெற்றது. பின்னர் தாய்லாந்தில் முக்கியமான காட்சிகள் இடம்பெற, இப்போது துருக்கி நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை வெங்கட் பிரபு எடுத்து வருகிறார். இதில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிக்கிறாராம்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படத்தில் விஜய் நடித்த திட்டமிட்டு உள்ளார். இதற்காக, நன்கு அரசியல் படம் எடுக்கும் இயக்குனரை அவர் தேர்ந்தெடுக்க உள்ளாராம். இந்த பட்டியலில் பா ரஞ்சித் அல்லது மாரி செல்வராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இணையலாம் என்று கூறப்படுகிறது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இதன் திரைக்கதை அமைய வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறாராம். விரைவில் விஜயின் அரசியல் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்