தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் புகழ்பெற்றவர் இயக்குனர் அட்லி. ஒரு கமர்சியல் திரைப்படத்தை அனைத்தையும் கரெக்டாக கொடுத்து அதன் மூலம் அப்ளாஸை பெற்றவர்தான் இவர். இயக்குனர் சங்கரிடம் உதவியாளராக இருந்த அட்லி, தனது ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
முதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் அப்போதே இவர் கதையைத் திருடி அப்படியே எடுப்பதாக புகார் எழுந்தது. மௌன ராகத்தின் மறு சாயில் தான் ராஜா ராணி என்று பலரும் அடித்து கூற, அதையெல்லாம் காதிலே வாங்கிக் கொள்ளாத அளவுக்கு அவரது திரைப்படம் அமைந்தது. திரைக்கதையில் அட்லி கெத்து அமைத்ததால் அவரை ஒரு தரப்பினர் கொண்டாட ஆரம்பித்தனர்.
தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை அட்லி இயக்கினார். இந்த மூன்று திரைப்படங்களும் காப்பி பிரச்சனையில் சிக்கினாலும் அது வசூலில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதனால் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக அட்லி மாறினார்.
இதைத்தொடர்ந்து ஹிந்தி திரை உலகிற்கு சென்ற அட்லி, ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கினார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க, முதல்முறையாக ஹீரோயின் ஆக நயன்தாரா ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகினார். படம் அங்கு எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
ஆனால் தமிழில் ஜவான் திரைப்படத்தை பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. முந்தைய காலத்தில் காப்பி கதையை ஒழுங்காக எடுத்த அட்லீ இந்த முறை அதிலும் சொதப்பி விட்டதாக பலரும் கமாண்ட் செய்தனர். இதன் காரணமாகவோ என்னவோ அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வருவதை தவிர்த்து வருகிறார். தனது அடுத்த படத்திற்காக அல்லு அர்ஜுன் இணைய இருந்தார் அட்லீ.
அனைத்து விஷயங்களும் முடிவடைந்த நிலையில் திடீரென அந்த திட்டம் கைவிடப்பட்டது. இதன் பிறகு சல்மான் கான் இடமும் ஒரு கதையை கூறினார். அதுவும் நடந்த பாடில்லை. ரஜினி இடமும் அட்லி என்ற நிலையில் அந்த கதையும் பாதியில் நிற்பதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மும்பையில் தனது உதவி இயக்குனர்களுடன் சேர்ந்து அடுத்த படத்திற்கு ஆன திட்டம் குறித்து அட்லி விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.





