நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். நடிப்பில் அவர் பெரிய உச்சத்தை தொட்டிருந்தாலும், ரஜினிகாந்த் உடன் ஒப்பிடுகையில் கமல்ஹாசன் பெற்ற வெற்றிகளின் எண்ணிக்கை குறைவுதான். கமலுக்கு கிடைத்த வெற்றி, புகழை விட ரஜினிக்கு பன்மடங்கு பெருகியிருப்பதே உண்மை.
உதாரணமாக, மக்கள் நீதிமய்யம் கட்சியை கமல் துவக்கியது போல, ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்கியிருந்தால் அவரது லெவலே வேறாக இருந்திருக்கும். ஆனால் கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் போதிய செல்வாக்கு இல்லாததால்தான். அவரது தமிழக அரசியலில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் கமல்ஹாசன் நடித்த படங்கள், தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் இந்திய அளவில், உலக அளவில் குறிப்பாக வெளிநாடுகளில் ரஜினி, விஜய் படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பும், ஆதரவும், அமோக வசூலும் கமல் படங்களுக்கு கிடைப்பது இல்லை. இந்த விஷயத்தில் முன்னிலையில் இருந்து வருவது விஜய், ரஜினிகாந்த் மட்டும்தான்.
ஆனால் நடிகர் கமல்ஹாசனுக்கு உலக நாயகன் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச அளவில் கமல்ஹாசன் எந்த விருதுகளும் பெறவில்லை. ஹாலிவுட் படங்களிலும் அவர் நடித்தது இல்லை. அப்படி நடித்து உலக ரசிகர்கள் மத்தியிலும் அறிமுகமாகவில்லை. சர்வதேச அளவிலான விருதுகளை அவர் பெற்றதும் இல்லை. குறிப்பாக ஆஸ்கர் அவார்டு ஏஆர் ரகுமான் பெற்ற நிலையில், கமல் அந்த அடையாளம் கூட பெறவில்லை.
இப்படி இருக்கையில், நடிகர் கமல்ஹாசனை எப்படி உலக நாயகன் என்று அழைப்பது சரியாகும் என்ற விமர்சனம் எழுந்து, இப்போது சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர். பகுத்தறிவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர். ஆனால் அவரை பலரும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என்று அழைக்கின்றனர்.
சரண் இயக்கத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஆழ்வார்பேட்டை ஆண்டவா, வேட்டியை போட்டு தாண்டவா என்ற பாடல் காட்சியில் கமல்ஹாசனே நடித்து ஆடியிருப்பார். கடவுளை மறுக்கும் ஒருவர், தன்னை எப்படி ஆண்டவர் என அழைக்க அனுமதித்தார் என்றும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். இப்போது, இது ஒரு விவகாரமாக மாறி வருகிறது.





