- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயனுடன் நடிகராக இணையும் பிரபல இயக்குனர்... சுதா கொங்கராவின் சூப்பர் பாய்ச்சல்... நிச்சயமா இதை யாரும்...

சிவகார்த்திகேயனுடன் நடிகராக இணையும் பிரபல இயக்குனர்… சுதா கொங்கராவின் சூப்பர் பாய்ச்சல்… நிச்சயமா இதை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க…

- Advertisement -

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகிறது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில், சாய் பல்லவி நடித்திருக்கிறார். ரங்கூன் படத்தை எடுத்த ராஜ்குமார் பெரியசாமி இதனை இயக்கியிருக்கிறார். ராணுவ பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

 

- Advertisement -

இந்தப் படத்திற்குப் பிறகு தனது 23 வது திரைப்படத்திற்காக ஏ ஆர் முருகதாஸுடன் சிவகார்த்திகேயன் இணைந்தார். இதற்கான சூட்டிங் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்றது. அண்மையில் திருச்செந்தூருக்கும் இந்த குழு சென்று வந்தது. இதில் விக்ராந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

- Advertisement -

துப்பாக்கியில் விஜய்க்கு எதிராக சண்டை போட்ட வித் யூத், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார். படத்தில் எஸ்கேவுக்கு மனம் நலம் குன்றிய கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. அனேகமாக அடுத்த மாதத்தில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் சிபி சக்கரவர்த்தியுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எஸ் கே வுக்கும் இது நூறு கோடி ரூபாய் வசூல் செய்த இரண்டாவது படமாக அமைந்தது. இதன் படப்பிடிப்பு, அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.

 

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் 25 வது படத்தை வெங்கட் பிரபு தான் இயக்குவதாக இருந்தது. சத்யஜோதி பிலிம்ஸ் இதனை தயாரிப்பதற்கான வேலைகளில் இறங்கிய சூழலில் தற்போது அதற்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு காரணங்களால் அந்த கூட்டணி பிரிந்துள்ளது. இப்படியான நேரத்தில் தான் சுதா கொங்கராவுடன் எஸ் கே கைகோர்த்து இருக்கிறார்.

 

புறநானூறு கதையை வேண்டாம் என்று சூர்யா உதறி தள்ளிய சூழலில் அந்த கதையைத்தான் சிவகார்த்திகேயன் டிக் செய்து உள்ளாராம். இதற்கான பணிகளில் சுதா இறங்கி இருக்கிறார். இவர் சூர்யா கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் புறநானூற்றில் துல்கர் சல்மான் ஏற்கனவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர் கேரக்டரில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பட குழுவினர் அணுகி இருக்கிறார்களாம். அவரும் சம்மதித்து விட்டதாக கூறப்படும் நிலையில் விரைவில் இந்த கூட்டணியை திரையில் பார்க்கலாம் என்று சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

சற்று முன்