- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா படத்தில் சூர்யா இத்தனை வேடங்களில் நடித்திருக்கிறாரா? டிரெய்லர் ரிலீஸ் தேதி வந்தாச்சு - நிறைய...

கங்குவா படத்தில் சூர்யா இத்தனை வேடங்களில் நடித்திருக்கிறாரா? டிரெய்லர் ரிலீஸ் தேதி வந்தாச்சு – நிறைய லேட்டஸ்ட் அப்டேட் தெரிஞ்சுக்குங்க!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில், சில ஆண்டுகளாக வெளிவந்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. இதற்கிடையே இயக்குனர் பாலா இயக்கத்தில் அவர் நடிப்பதாக இருந்த வணங்கான் படத்தில், ஒரு மாதம் நடித்துவிட்டு அவர் விலகிவிட்டார். அந்த படத்தில் சூர்யா நடிக்க இருந்த கேரக்டரில் அருண் விஜய் நடித்துள்ளார்.

அதே போல் சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்திலும் நடிக்க நடிகர் சூர்யா கமிட் ஆனார். இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தை கொண்ட இந்த கதையிலும் சூர்யா ஒரு கட்டத்தில் நடிக்க மறுத்து விலகி விட்டார். இப்போது அதே கதையை, வேறு டைட்டில் பெயரில் சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி நல்ல இயக்குனர்கள், நல்ல கதைகளை சூர்யா மறுப்பதும், இயக்குனர்களிடம் பிரச்னை செய்வதும் தொடர்கிறது. இப்போது சூர்யா 44 படத்தில் நடித்து வரும் சூர்யா, படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜிடம் மோதல் போக்கில் ஈடுபட்டதாகவும், இருவரும் பயங்கர மனஸ்தாபத்தில் இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.

இப்படியே தொடர்ந்து இயக்குனர்களிடம் வம்பு செய்து, கதையில் குறுக்கீடு செய்து சூர்யா கெட்டப் பெயரை சம்பாதித்துக்கொள்வதால் நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழப்பது மட்டுமின்றி, அவரது நற்பெயரை கெடுத்துக்கொள்கிறார். இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவர உள்ள கங்குவா படம்தான், சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த படத்தை ஸ்டுடியோ ஸ்கிரீன், யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியன், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ரவி ராகவேந்திரா, கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

கங்குவா படத்தில், நடிகர் சூர்யா 7 வேடங்களில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி கங்குவா படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் டிரெய்லர் வருகிற 12ம் தேதி, படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவாவின் பிறந்த நாளன்று வெளியாகும் என்றும் தெரிய வந்துள்ளது. கங்குவா டிரெய்லரை காண சூர்யா ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

சற்று முன்