- Advertisement -
Homeபொழுதுபோக்குஆரம்பமே இப்படி ஒரு சோதனையா? விஜய் 69 படப்பிடிப்பு வெறும் 26 நாட்கள் மட்டும்தான் நடக்குமா?...

ஆரம்பமே இப்படி ஒரு சோதனையா? விஜய் 69 படப்பிடிப்பு வெறும் 26 நாட்கள் மட்டும்தான் நடக்குமா? – என்னய்யா தளபதி ரசிகர்களுக்கு வந்த ரோதனை

- Advertisement -

நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம், வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில், இந்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என்பதால், ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். இந்த டிரெய்லர்தான் இந்த படம் குறித்த ஒரு எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தும்.

ஏனெனில் இதுவரை தி கோட் படத்தில் இருந்து வெளியான 3 பாடல்களுமே மிகப்பெரிய ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்திருக்கின்றன. அது மட்டுமின்றி டீஏஜிங் தொழில்நுட்பத்தில் விஜயை பார்த்த ரசிகர்கள், இதுக்கு மேல் விஜயை அலங்கோலமாக காட்ட முடியாது என, படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவை திட்டி வருகின்றனர்.

இயக்குனர் வெங்கட்பிரபு, நடிகர் அஜீத்குமாரின் தீவிர ரசிகர் என்பதால்தான் விஜயை இப்படி டீ ஏஜிங் என்ற பெயரில், இப்படி காட்டியிருக்கிறார். இவர் விஜய் ரசிகர்களை நிச்சயமாக திருப்திபடுத்த மாட்டார். தி கோட் படத்தை பொருத்த வரை விஜய் படத்துக்கான அம்சங்கள் இருக்காது என்றும் புலம்பி வருகின்றனர்.

இதற்கிடையே விஜய் நடிக்கும் 69வது படம் குறித்து முக்கிய தகவலை நேற்று படத்தின் இயக்குனர் எச் வினோத் வெளியிட்டார். ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் விஜய் 69 படத்தை அவர் இயக்குவதை உறுதிபடுத்தினார். மேலும் இந்த படத்தில் அரசியல் இருக்காது, அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் கமர்ஷியல் படமாக தான் இருக்கும் என்றும் உறுதிபடுத்தினார்.

அதுமட்டுமின்றி வருகிற அக்டோபர் மாதம் 4ம் தேதி, விஜயின் 69வது படம் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்க இருப்பதாகவும் இப்போது லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அக்டோபர் 31ம் தேதி வரை மட்டுமே இந்த படப்பிடிப்பு நடக்கும் எ்ன்றும் தெரிய வந்துள்ளது. 26 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடக்கும் என்ற தகவல் தளபதி ரசிகர்களை கலக்கமடைய செய்துள்ளது.

சினிமா துறையில் நீடித்து வரும் பிரச்னைகள் காரணமாக, வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் எதுவும் நடக்காது, படம் தயாரிப்பு சார்ந்த அனைத்து பணிகளும் நிறுத்தப்படும் என ஏற்கனவே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதனால் அக்டோபர் 4 முதல் 30ம் தேதி வரை 26 நாட்கள் மட்டுமே விஜய் 69 படப்பிடிப்பு நடத்தப்படும். பிறகு ஸ்டிரைக் அறிவிப்பை தயாரிப்பாளர் சங்கம் ஒருவேளை வாபஸ் பெற்றால் தொடர்ந்து ஷூட்டிங் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

சற்று முன்