முன்பெல்லாம் சினிமாவில் ஒரு புதிய படம் உருவாக்க திட்டமிட்டால் படத்தின் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் அவர்கள் தரப்பில்தான் படத்தின் ஏ முதல் இசட் வரை எல்லா விஷயங்களையும் முடிவு செய்தார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை மாறிவிட்டது. பெரிய ஸ்டார் நடிகர்கள் நடிக்கும் படங்களில் இந்த சூழல் இப்போது இல்லை.
முன்னணி நட்சத்திர நடிகர்கள், அவர்கள் நடிக்கும் படத்தில் நடிக்கும் ஹீரோ நாயகி, இசையமைப்பாளர் போன்றவர்களை அவர்களே தேர்வு செய்கின்றனர். தனக்கு இந்த நாயகி ஜோடியாக நடித்தால் நன்றாக இருக்கும், இந்த இசையைமப்பாளர் இசையமைத்தால் சிறப்பாக வரும் என்று அவர்கள் சிபாரிசு செய்யும்போது தயாரிப்பாளரோ, இயக்குனரோ மறுக்க முடியாது.
அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பேவரிட் இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத் தான். சினிமாவை தாண்டி இருவருக்கும் நெருக்கமான நட்பு உள்ளது. அனிருத்தை பொருத்த வரை தனது மியூசிக் ஸ்டுடியோவுக்குள் எந்த இயக்குனரையும், நடிகரையும் அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால் இதில் சிலர் மட்டுமே விதிவிலக்காக உள்ளது. குறிப்பாக நடிகர்கள் சிவகார்த்திகேன் தனுஷ் மற்றும் இயக்குனர் நெல்சன் போன்றவர்களை மட்டுமே தனது இசை கூடத்துக்குள் அனிருத் அனுமதிக்கிறார். அந்த அளவுக்கு நெருங்கிய நட்பு அவர்களுக்குள் உள்ளது. ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் அடுத்ததாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தில் அனிருத்துக்கு பதிலாக சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் அட்லிதான். இயக்குனர் சிபி சக்ரவர்த்தி, அட்லியிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர். அதனால் சாய் அபயங்கரை அட்லி சிபாரிசு செய்த நிலையில் சிபி சக்ரவர்த்தி ஓகே சொல்லி விட்டார். ஆனால் சாய் அபயங்கரை நீக்கி விட்டு தனது நெருங்கிய நண்பர் அனிருத்தை இந்த படத்துக்கு இசையமைக்க வைக்கலாம் என்று சிவகார்த்திகேயன் தடை போட்டிருக்கலாம். ஆனால் அமைதியாக இருந்து விட்டார்.
இதற்கு முக்கிய காரணம், இப்போதைய நிலவரப்படி இயக்குனர் அட்லி ஒரு பெரிய இயக்குனர்கள். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜூன் நடிக்கும் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இந்தியிலும் ஷாருக்கானுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த இயக்குனர். அதனால் அட்லி மூலமாக இந்திக்கும் ஒரு ரவுண்டு போகும் திட்டத்தில்தான், அட்லியின் சிபாரிசுக்கு மறுப்பின்றி சிவகார்த்திகேயன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





