- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜின் வாழை திரைப்படம் எப்படி இருக்கிறது... வந்தாச்சு முதல் விமர்சனம்...

மாரி செல்வராஜின் வாழை திரைப்படம் எப்படி இருக்கிறது… வந்தாச்சு முதல் விமர்சனம்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராகி இருக்கிறார் மாரி செல்வராஜ். தனது முதல் திரைப்படம் ஆன பரியேறும் பெருமாள் படத்திலிருந்து, தான் யார் என்றும், தான் அனுபவித்த வலி என்னவென்றும் கண்முன்னே காட்சி படுத்தினார் மாரி செல்வராஜ். அவர் எதிர்பார்த்தது போலவே அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

- Advertisement -

இதன்பிறகு, தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை இயக்கினார் மாரி செல்வராஜ். பேருந்து வசதி கிடைக்காமல் தள்ளாடும் கிராம மக்கள், அதைக் கொடுக்காமல் இருக்கும் சாதி அரசியல், இதனால் ஏற்படும் விளைவுகள் என தனது இரண்டாவது திரைப்படத்தை ஆக்ஷன் ரீதியாக கொண்டு சென்றார் மாரி செல்வராஜ்.

 

- Advertisement -

ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களின் மனதில் ஒட்டவில்லை என்பது தான் உண்மை. ஆனால் வசூல் ரீதியாக கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் திரைப்படமும் அவருக்கு வெற்றிப்பட இயக்குனர் அந்தஸ்தை கொடுத்தது.

 

இப்படியான சூழலில்தான் அவர் தற்போது வாழை திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். முதலில் இந்த படம், ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸ் ஆவதாக தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில், தயாரிப்பு நிறுவனமே திரையரங்குகளில் படத்தை வெளியிட முடிவு செய்தது. உதயநிதி ஸ்டாலினின், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறது.

 

சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில், கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வாழைத் தோட்டத்தில் கூலிக்கு வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கையை இந்த திரைப்படம் பிரதிபலிக்கிறது. மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த கதையை தான் இதனை படமாக்கி இருக்கிறார்.

 

ஏற்கனவே இதன் ட்ரெய்லர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், வாழை திரைப்படம் மிக நன்றாக இருப்பதாக சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். பிரஸ் ஷோவில் பார்த்தவர்கள், மாரி செல்வராஜ் படம் பிடிப்பவர்களுக்கு இந்த படமும் பிடிக்கும் என்று கூறி இருக்கின்றனர். நிகிலா படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாகவும், முதல் பாதி கலகலப்பாக உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு வலுச்சேர்த்து இருப்பதாக, அவர்கள் கூறியிருக்கிறார்கள். வரும் 23ஆம் தேதி வாழை திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடப்பட்டது.

 

- Advertisement -

சற்று முன்