- Advertisement -
Homeபொழுதுபோக்குகமலை விட்டுவிட்டு சிம்புவுடன் சூட்டிங் சென்ற மணிரத்னம்... தக் லைஃப் படத்தில் எஸ்.டி.ஆருக்கு ஜோடியாக...

கமலை விட்டுவிட்டு சிம்புவுடன் சூட்டிங் சென்ற மணிரத்னம்… தக் லைஃப் படத்தில் எஸ்.டி.ஆருக்கு ஜோடியாக நடிப்பது யார் தெரியுமா…

- Advertisement -

தொடர்ந்து பல ஆண்டுகளாக தோல்வி படத்தையே கொடுத்து வந்த சிம்புவுக்கு, மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது மாநாடு திரைப்படம். அதற்கு முன்பாக, மணிரத்னம் இயக்கத்தில் எடுக்கப்பட்ட செக்கச் சிவந்த வானம் திரைப்படத்திலும் சிம்பு கவனிக்கப்பட்டார். இருப்பினும், முழு நேர கதாநாயகனாக அவர் நடித்திருந்த மாநாடு திரைப்படம், சிம்புவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது.

 

- Advertisement -

டைம் லூப் கான்செப்ட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், தான் சொல்ல வந்ததை திரைக்கதையில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் தெளிவாக கூறியதால் ரசிகர்கள் இதற்கு பச்சை கொடி காட்டினர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது.

 

- Advertisement -

பிறகு கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான பத்து தல திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக அவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் இணைந்தார். இதன் அறிவிப்பு சீக்கிரம் தொடங்கப்பட்டாலும், படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகள் ஆரம்பமாகாமலேயே இருந்தன.

 

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு படம் குறித்த அறிவிப்பு வெளியானது. வரலாற்று பாணியில் உருவாகும் இந்த திரைப்படத்தின், சூட்டிங் இப்போது வரை தொடங்கப்பட்டதா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இவ்வாறு இக்கட்டான சூழலில் தான், மணிரத்னம் படத்திற்கு சென்றிருக்கிறார் சிம்பு.

 

கமல்ஹாசனை வைத்து அவர் இயக்கி வரும் தக்லைப் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, செர்பியா நாட்டில் நடைபெற்றது. பிறகு தேர்தலுக்காக கமல்ஹாசன் இங்கு வந்ததால், சூட்டிங் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதேசமயம் கால்ஷீட் பிரச்சினை காரணமாக, துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானது. இந்த சமயத்தில்தான் சிம்புவை மணிரத்னம் பிடித்திருக்கிறார்.

 

இந்த திரைப்படத்தில் அவருக்கு இரட்டை கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலம், ஜெய் சல்மார் பகுதியில் சூட்டிங் நடைபெற்று வருகிறது. அதில், சிம்பு, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோ ஜூ ஜார்ஜ் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறாராம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மீண்டும் இவர்கள் ஜோடி சேர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்