- Advertisement -
Homeபொழுதுபோக்கு27 நாட்களில் ராயன் செய்த மொத்த வசூல் இத்தனை கோடிகளா? வேற லெவலில் சாதனை நிகழ்த்திக்...

27 நாட்களில் ராயன் செய்த மொத்த வசூல் இத்தனை கோடிகளா? வேற லெவலில் சாதனை நிகழ்த்திக் காட்டிய நடிகர் தனுஷ் – ஓடிடியில் நாளை ரிலீஸ்

- Advertisement -

நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரே நடித்து வெளியான படம் ராயன், கடந்த ஜூலை 26ம் தேதி வெளியான இந்த படம் தனுஷ் நடித்த 50வது படம். இந்த படம் நாளை ( 23ம் தேதி) நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. நடிகர் தனுஷ் ஏற்கனவே ப பாண்டி என்ற படத்தை இயக்கிய நிலையில், ராயன் அவர் இயக்கிய 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் செல்வராகவன் படங்களில் நடித்துதான், தனுஷ் சினிமா நடிகராக தமிழ சினிமாவில் முன்னணி நடிகரானார். குறிப்பாக காதல் கொண்டேன், புதுப்பேட்டை, நானே வருவேன் என அவரது இயக்கத்தில் வித்யாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். நல்ல நடிகராக அவரை செல்வராகவன் உருவாக்கினார்.

அதன்பிறகு இயக்குனர் வெற்றிமாறன் தனுஷை ஒரு பக்குவபட்ட நடிகராக மாற்றினார். எந்த கேரக்டரிலும் தனுஷ் சிறப்பாக நடிக்க முடியும் என்பதற்கு வெற்றிமாறன் பக்கபலமாக மாறி, அவரது படங்களில் நடிக்க வைத்தார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனுஷ் நடிப்பில் பல பரிமாணங்களை தொட்டார்.

அதன் தொடர்ச்சியாக ராயன் படத்தை இயக்கி நடித்துள்ள நடிகர் தனுஷ், ராயன் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். அந்த இறுக்கமான முகமும், அழுத்தமான பார்வையும், நடை உடை பாவனையில் அவர் காட்டியிருக்கும் கெத்தும் வேற லெவலில் இருக்கின்றன. படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் தன் நடிப்பின் ஆழத்தை காட்டியிருக்கிறார்.

ராயன் படத்தில் வன்முறை காட்சிகளே அதிகமாக இருக்கின்றன என்று துவக்கத்தில் எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும், ராயன் படத்தில் ஏஆர் ரகுமான் இசையும், பாடல்களும், குறிப்பாக தனுஷ், அவரது தங்கையாக நடித்த துஷாரா விஜயன் மற்றும் அபர்ணா பாலமுரளி போன்றவர்களின் நடிப்பும் வேற லெவலில் படத்தை கொண்டு சென்றுவிட்டது.

இதுவரை நடிகர் தனுஷ் நடித்த படங்களில், மிக குறுகிய நாட்களில் 100 கோடி ரூபாய் என்ற வசூல் இலக்கை அடைந்தது ராயன் படம்தான். மேலும், இந்த ஆண்டில் வெளியான படங்களிலும், மிக விரைவில் 100 கோடி ரூபாய் இலக்கை கடந்ததும் ராயன் படம்தான் என்ற சாதனைகளை புரிந்தது. நாளை 23ம் தேதி ராயன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகும் நிலையில், சன் நெக்ஸ்ட் செயலியிலும் இந்த படத்தை காணலாம். கடந்த ஜூலை 26ம் தேதி ராயன் படம் ரிலீஸ் ஆன நிலையில், நேற்று வரை 27 நாட்களில் மொத்தம் 157 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது.

சற்று முன்