நடிகர் விஜயை பொருத்த வரை சைலண்ட் பேர்வழிதான். எதைப்பற்றியும் அவ்வளவு சீக்கிரமாக அவர் வாய் திறந்து பேச மாட்டார். யார் தன்னை பற்றி விமர்சித்து பேசினாலும் விஜயிடம் இருந்து உடனடியாக பதில் வராது. ஆனால் அவரது செயல்களில் அதற்கான தக்க பதிலடி கொடுத்து விடுவார்.
அவரது ஒரு படம் மிக மொக்கையாக போய்விட்டால், கடுமையான விமர்சனத்தில் சிக்கிக்கொண்டால், நிச்சயமாக அவரது அடுத்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறும் சிறந்த படமாக இருக்கும். அதே வேளையில் அந்த வெற்றிக்காக பெரிதாக அலட்டிக்கொள்ளும் பழக்கமும் விஜயிடம் இருக்காது.
ஆனால் அவர் மிகவும் எதிர்பார்த்த படம் லியோ. ஏனெனில் அதற்கு முந்தைய படங்களான பீஸ்ட், வாரிசு படங்கள் அவருக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துவிட்டன. வசூல் ரீதியாக ஓகே என்றாலும் விமர்சன ரீதியாக அந்த படங்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. எனினும் ஒரு கலைஞனுக்கு வருமானத்தை காட்டிலும், ரசிகனின் திருப்தியும் அதன் வெளிப்பாடாக கிடைக்கும் கைதட்டலும்தான் முக்கியம்.
அதனால் லியோ படம் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்த்தார். ஆனால் படம் குறித்த பல தகவல்கள் அடுத்தடுத்த அப்டேட் ஆன நிலையில், நிறைய வதந்திகளும் பரவி பரவி, படத்துக்கு நேர்மறை, எதிர்மறை என இரண்டு விதமான எதிர்பார்ப்புகளும் ஏற்பட்டது. முடிவில் படம் பார்த்த ரசிகர்களால் அந்த எதிர்பார்ப்புகளுக்கான படமாக லியோ இல்லாததே பெரிய பின்னடைவாக போய்விட்டது.
அதனால் வெங்கட்பிரபுவிடம் விஜய் 68 படத்தை துவக்கும்போதே படம் குறித்த எந்த தகவலும் கசியக்கூடாது. குறிப்பாக படத்தின் பெயர், கதை, நடிகர்கள் விவரம் என எதுவும் வெளியே போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சோஷியல் மீடியாவில் அதைப்பற்றி எழுதி எழுதியே படத்தை காலி செய்து விடுவார்கள். லியோ படம் அப்படிதான் ஆனது என ஸ்ட்ரிக்ட் ஆக கண்டிசன் போட்டிருக்கிறார். ஆனால் விஜய் சொன்ன எதுவுமே நடக்கவில்லை. படம் குறித்த அப்டேட் தொடர்ந்து வந்தபடியே இருக்கின்றன.
இதையடுத்து பயங்கர கடுப்பான விஜய், சமயம் பார்த்து காத்திருந்தவர் விஜயகாந்த் நினைவிடத்துக்கும், நெல்லை மாவட்டத்துக்கும் கோட் படத்தில் நடிக்கும் அதே கெட்டப்பில் வந்தார். இப்போது மகனாக நடிக்கும் கேரக்டரில் மீசை தாடி இல்லாத வழித்த முகத்துடன், நேற்று ரசிகர்களுடன் செல்பி எடுத்து சோஷியல் மீடியாவில் வைரலாக்கி விட்டார். கோட் படத்தில் மகன் கேரக்டர் கெட்டப்பையே வெளியிட்ட விஜயிடம் இதுகுறித்து எதுவுமே கேட்க முடியாமல் நொந்து போய் இருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு.





