- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்துக்கொள்ள தயாராக இல்லை, புஷ்பா பட இயக்குனர் சுகுமாறன் உறுதி...

அந்த விஷயத்தில் நாங்கள் சமரசம் செய்துக்கொள்ள தயாராக இல்லை, புஷ்பா பட இயக்குனர் சுகுமாறன் உறுதி – அப்போ டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 வருமா, வராதா?

- Advertisement -

சினிமாவில் சில படங்கள் மட்டுமே சகல விதங்களிலும் ரசிகர்களை திருப்திபடுத்தும். சிறியவர் பெரியவர் என பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் அந்த படம் மிக பிடித்ததாக அமையும். பெண்களுக்கும் அந்த படம் ரசிக்கும்படியாக இருந்துவிடும். அப்படி ஒரு படமாகதான் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் இருந்தது.

இந்த படத்தில் நடித்ததற்காக மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது பெற்றார் அல்லு அர்ஜூன். ரசிகர்களின் பலத்த ஆதரவை, வரவேற்பை பெற்ற இந்த படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் (டிஎஸ்பி) இசையமைத்து இருந்தார். படத்தில் சுமன், பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். செம்மரக் கடத்தல் கதையை மையமாக கொண்ட இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் பெரிய அளவில் ரசிகர்களிடம் டிரண்டிங் ஆனது.

இந்நிலையில் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி புஷ்பா 2 ம்பாகம் வெளியாகும் என ஏற்கனவே படத்தின் இயக்குனர் சுகுமாரன் அறிவித்து இருந்தார். ஆனால் திட்டமிட்ட நாளில் படத்தை வெளியிட முடியவில்லை. படத்தை சிறப்பாக கொடுக்க வேண்டி இருப்பதால், டிசம்பர் 6ம் தேதி வரை பொறுத்திடுங்கள் என ரிலீஸ் தேதியை டிசம்பர் 6க்கு மாற்றினர். ஆனால் இப்போது அந்த நாளிலும் புஷ்பா 2 வெளியாகாது என்று தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

இப்போது மாருதி நகர் சுப்ரமணியம் என்ற படத்தின் நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமாரன், நடிகர் அல்லு அர்ஜூன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அப்போது இயக்குனர் சுகுமாரன் பேசுகையில், ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்க, நாங்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டு இருக்கிேறாம். சில காட்சிகளை எடுக்க அதிக நேரமாகிறது. அதில் நாங்கள் சமரசம் செய்துக்கொள்ள விரும்பவில்லை.

அதனால்தான் புஷ்பா 2ம் பாகம் படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்படுகிறது. இந்த படத்திலும் முதல் பாகம் போலவே அல்லு அர்ஜூனின் நடிப்பும், படமும் சிறப்பாக இருக்கும். ஏற்கனவே திட்டமிட்டபடி படம் வருகிற டிசம்பர் 6ம் தேதி வெளியாகும்.அதுபற்றிய வதந்திகளில் சிறிதும் உண்மை இல்லை என்று இயக்குனர் சுகுமாரன் உறுதியாக பேசியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்