- Advertisement -
Homeபொழுதுபோக்குஎச் வினோத் இயக்கும் தளபதி 69 படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? படப்பிடிப்பு தடையின்றி தொடர்ந்து...

எச் வினோத் இயக்கும் தளபதி 69 படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? படப்பிடிப்பு தடையின்றி தொடர்ந்து நடக்குமா? குழப்பத்தில் தவிக்கும் விஜய் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் விஜய் தி கோட் படத்தை அடுத்து இப்போது தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். தீரன் அதிகாரம் 1, சதுரங்க வேட்டை, வலிமை, துணிவு, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கிய இயக்குனர் எச் வினோத் தளபதி 69 படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிக்கிறது.

தளபதி 69 படத்தில் நடிகர் விஜய்க்கு பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். மேலும் பிரியாமணி, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய் நடிக்கும் இந்த படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட சில முக்கியமான பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டன. எனினும் பெங்களூருவைச் சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் இந்த படத்தை தயாரிக்க விஜய் அனுமதித்தார். மேலும், அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம்தான், விஜய் நடிக்கும் கடைசி படம் தளபதி 69 என்பதும் கவனிக்கத்தக்கது.

தளபதி 69 படத்தின் ஓவர்சீஸ் உரிமத்தை ஏற்கனவே துபாயை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு ரூ. 75 கோடிக்கு கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் விற்றுவிட்டது. மேலும் அந்த நிறுவனத்திடம் சிங்கிள் பேமேண்டாக அதை வழங்குமாறு கேட்டும் வாங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி அந்த துபாய் வினியோக நிறுவனத்திடம் ரூ. 100 கோடி கடனாக கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் பெற்றதாகவும் தகவல் வெளியானது. அத்துடன் தளபதி 69 படத்தின் தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை, லியோ படத்தின் தயாரிப்பாளர், நடிகர் விஜயின் நண்பர் எஸ்எஸ் லலித்குமார் ரூ. 100 கோடிக்கு வாங்கிய தகவலும் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், மதுரையை சேர்ந்த பிரபல சினிமா தயாரிப்பாளர், பைனானஸியர் மதுரை அன்பு என அழைக்கப்படும் அன்பு செழியனிடம் பல கோடிகள் கேவிஎன் புரடக்சன்ஸ் கடன் கேட்டதாகவும் அவர் தர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கேவிஎன் புரடக்சன்ஸ் மற்ற படங்கள் தயாரிப்புக்காக ரூ. 250 கோடி வரை வெளியில் கொடுத்ததால் தான் நிதி நெருக்கடியில் தவிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால் தளபதி 69 படப்பிடிப்பு பாதிக்குமா என்ற தவிப்பில், குழப்பத்தில் விஜய் ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்