- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு - சூப்பர் ஸ்டார்...

வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு – சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகம்

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படம் தந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக ரஜினிகாந்த் கமிட் ஆன படம் வேட்டையன். இந்த படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தசெ ஞானவேல் டைரக்ட் செய்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாஜா விஜயன், மஞ்சுவாரியார் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்திருக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வருகிற அக்டோபர் மாதம் 10ம் தேதி வேட்டையன் படம் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படமும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினி படத்துடன் சூர்யா படம் மோதுமா, அல்லது அதை தவிர்க்கும் விதமாக அக்டோபர் 10ம் தேதிக்கு பின் ஓரிரு வாரங்கள் கழித்தோ, அல்லது அதற்கு முன்போ கங்குவா படம் ரிலீஸ் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டைரக்ட் செய்த லால் சலாம் என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது.

கூலி படத்தை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களில் நடித்து முடித்து படம் ரிலீஸ் ஆகி உள்ளது. வேட்டையன் 170வது படம். கூலி 171வது படம். இதுவரை ரஜினி நடித்த எந்த படத்திலும் அவர் 2ம் பாகத்தில் நடித்தது இல்லை. ஆனால் அவரது 172வது படம் ஜெயிலர் 2ம் பாகமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் மாதம் 20ம் தேதி நடக்க உள்ளது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த விழாவை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த், பகத் பாசில், ராணா டகுபதி, அனிருத், மஞ்சுவாரியார் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

சற்று முன்