- Advertisement -
Homeபொழுதுபோக்குசல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்கி வரும் ஏஆர் முருகதாஸ், என்ன ஆர்டர் செய்திருக்கிறார் தெரியுமா? -...

சல்மான்கான் நடிக்கும் படத்தை இயக்கி வரும் ஏஆர் முருகதாஸ், என்ன ஆர்டர் செய்திருக்கிறார் தெரியுமா? – அடேங்கப்பா… அப்போ படம் சரவெடியா தான் இருக்கப் போகுது!

- Advertisement -

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் ஒரு முக்கிய இயக்குனராக பார்க்கப்படுகிறார். அவர் இயக்கிய கஜினி படம், சூர்யாவின் திரை பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதே போல் விஜயகாந்த் நடித்த ரமணா, விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, சர்கார், சூர்யா நடித்த 7ம் அறிவு என பல படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

ஆனால் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஆக்‌ஷன் படம் தர்பார் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. விஜய், விஜயகாந்த், சூர்யா போன்றவர்களுக்கு வெற்றிப் படங்களை கொடுத்த ஏஆர் முருகதாஸ் ரஜினி விஷயத்தில் பிளாப் தந்தார். பேட்ட படம் போல், ஆக்‌ஷன் களத்தில் இறங்கிய அவருக்கு தர்பார் கைகொடுக்கவில்லை.

அதன்பிறகு சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் நடிக்கும் புதிய படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு அனிருத் இசையைமக்கிறார். சிங்கநடை என இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தர்பார் படம் தந்த தோல்விக்கு பிறகு ஏஆர் முருதாஸூம், அயலான் படம் தந்த தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயனும் இணைந்து கூட்டணி அமைத்துள்ள இந்த படத்தை, மிகப்பெரிய வெற்றிப் படமாக ரசிகர்களுக்கு கொடுக்க பகீரத முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 70 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இதற்கிடையே இந்தியில் சல்மான் நடிக்கும் ஒரு புதிய படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குகிறார். இந்த படத்துக்கு சிக்கந்தர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் துவங்கியது. சிவகார்த்திகேயன் படம், சல்மான்கான் படம் என ஏஆர் முருகதாஸ் 2 படங்களின் படப்பிடிப்புகளையும் நடத்தி வருகிறார்.

சிக்கந்தர் படத்தில் சல்மான்கானுடன் ராஷ்மிகா மந்தனா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. 40 நாட்களுக்கு தொடர்ந்து நடக்கிறது. இதில் இரட்டை வேடங்களில் சல்மான் கான் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆக்சன் அதிரடி சண்டை படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பில் பயன்படுத்துவதற்காக 10 ஆயிரம் டம்மி கைத்துப்பாக்கிகள், தோட்டாக்களை இயக்குனர் தரப்பில் இருந்து ஆர்டர் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. அப்படி என்றால், படத்தில் துப்பாக்கி வெடி சத்தத்துக்கு பஞ்சமே இருக்காது.

சற்று முன்