- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்த தினம்; தேமுதிக அலுவலகத்தில் நடந்த தரமான சம்பவம், ஆனந்த...

இன்று கேப்டன் விஜயகாந்தின் 72வது பிறந்த தினம்; தேமுதிக அலுவலகத்தில் நடந்த தரமான சம்பவம், ஆனந்த கண்ணீர் விட்ட கட்சித் தொண்டர்கள்

- Advertisement -

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். துவக்கத்தில் புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்பட்ட அவர், கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்த பிறகு ரசிகர்களால் கேப்டன் அழைக்கப்பட்டார். இவர் மறைந்த பிறகும் இப்போதும் கேப்டன் என்றுதான் ரசிகர்களால், கட்சி தொண்டர்களால் அழைக்கப்படுகிறார்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக விஜயகாந்த், ஒரு காலகட்டத்தில் பொறுப்பு வகித்தார். பொதுச் செயலாளராக சரத்குமார் இருந்தார். அந்த காலகட்டத்தில், நீண்டகாலமாக இருந்த நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக ரஜினி, கமல் ஆகியோரை துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வௌிநாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தவர் விஜயகாந்த்.

- Advertisement -

வேறு யாருமே ரஜினி, கமலிடம் இதுபற்றி பேசவும் அவர்களை அழைக்கவுமே யோசிக்கும், தயங்கும் நிலையில் அவர்களை இருவரையும் வந்தே ஆக வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டவர் விஜயகாந்த். அவர்களுக்கும் விஜயகாந்த் பேச்சுக்கு கட்டுப்பட்டு, அந்நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக பங்கேற்றனர்.

சினிமாவில், எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக வாரி வழங்கும் வள்ளல் குணம் கொண்டவராக இருந்த விஜயகாந்த், தேமுதிக என்ற அரசியல் கட்சியை 2005ம் ஆண்டில் துவங்கி, தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா அமைச்சரவையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தவர் விஜயகாந்த். ஆனால் ஒரு கட்டத்தில் உடல் நலம் மோசமடைந்து 6 ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு இருந்த அவர், கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மறைந்தார்.

- Advertisement -

இன்று விஜயகாந்தின் 72வது பிறந்தநாள். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 25ம் தேதி அவரது பிறந்த நாளில் ஏழைமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆரம்பத்தில் தனது ரசிகர் மன்றங்கள் மூலமாகவும், அதன்பிறகு தேமுதிக கட்சி சார்பிலும் வழங்கியவர் கேப்டன் விஜயகாந்த். இன்று அவரது பிறந்த நாளில் தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் திருவுருவச் சிலை திறப்பு விழா நடந்தது.

தேமுதிக கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா, கேப்டன் விஜயகாந்த் உருவச்சிலையை திறந்து வைத்தார். அவரது மகன்கள் விஜயபிரபாகரன், சண்முக பாண்டியன், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கியதால் மயக்கமடைந்த கேப்டன் மகன் சண்முகபாண்டியன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

சற்று முன்