நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வருகிற 23ம் தேதி அல்லது 30ம் தேதி விடாமுயற்சி படம் ரிலீஸாக உள்ளது. சென்சார் தணிக்கைக்கு சென்ற இந்த படத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் இருந்த நிலையில் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அந்த வார்த்தைகளை மியூட் செய்யவும், அல்லது நீக்கவும் தணிக்கைக்குழு படக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆனால் மற்ற படங்களை போல 2 மணி நேரம் 45 நிமிடம், 3 மணி நேரம், 3 மணி 30 நிமிடம் என படத்தின் நீளத்தை இழுக்காமல், விடாமுயற்சி படம் 2 மணி நேரம் 30 நிமிடம் 56 வினாடிகள் மட்டுமே திரையில் ஓடும் என்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலாக உள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த போதே மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்திலும் நடிகர் அஜீத்குமார் நடித்து முடித்து விட்டார். அந்த படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதே நாளில் தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை படமும் ரிலீஸாகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான அஜீத்குமார் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் அசந்து போயினர். அவரது ஒல்லியான உருவத்தை பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டனர். காரணம், உடல் பருமனுடன் சில மாதங்களுக்கு முன் இருந்த அஜீத்குமார் இப்போது ஸ்லிம் ஆன தோற்றத்தில் உடல் எடை பாதியாக குறைந்து காணப்படுகிறார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றில் மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கூறியதாவது, நடிகர் அஜீத்குமாரின் உடல் எடை திடீரென கணிசமாக குறைந்து ஒல்லியாக மாறிவிட்டார். இது எப்படி இவ்வளவு விரைவில் நடந்தது என்ற தகவல் இப்போது கிடைத்துள்ளது. ஆனால் இதை 50 சதவீதம் நம்புவதா, 50 சதவீதம் நம்ப வேண்டாமா என்றும் தோன்றுகிறது.
அஜீத் தனது உடல் எடையை குறைக்க 90 நாட்கள் தொடர்ந்து வெந்நீர் மட்டுமே குடித்திருக்கிறார். இடையிடையே புரதசத்து மற்றும் அதுசார்ந்த மாத்திரைகளையும் சாப்பிட்டு இருக்கிறார். இப்படிதான் அவர் உடல் எடையை குறைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதை யாரும் முயற்சி செய்ய வேண்டாம். இது உறுதியான தகவலாக தெரியவில்லை. மேலும் இதுபோன்ற முயற்சிகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.





