- Advertisement -
Homeபொழுதுபோக்குபுறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பது இந்த நடிகையா... ஆனால் அந்த குத்து பாட்டு எல்லாம்...

புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பது இந்த நடிகையா… ஆனால் அந்த குத்து பாட்டு எல்லாம் இருக்கும்னு எதிர்பார்க்காதீங்க…

- Advertisement -

சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தின் தனது 23 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டன. இதற்காக நீண்ட தாடியுடன் காட்சி இருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்தில் இவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார்.

 

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில், விக்ராந்த், துப்பாக்கிப் பட வில்லன் வித்யூத் என ஏராளமானோர் நடிக்கின்றனர். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், திருச்செந்தூரிலும் இதன் சூட்டிங் பணிகள் நடைபெற்றன.

 

அந்த சமயத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏ ஆர் முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் தரிசனம் செய்தனர். அனேகமாக இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, தனது 24 வது திரைப்படத்திற்காக, டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உடன் மீண்டும் அவர் இணைந்து இருக்கிறார்.

 

இந்த படத்திற்கான பிரீ ப்ரோடுக்ஷன் வேலைகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம், குறுகிய காலத்தில் இந்த படம் எடுக்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தனது 25வது திரைப்படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் சிவகார்த்திகேயன் இணைந்திருந்தார். இதனை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது.

 

ஆனால் கடைசி நேரத்தில் அந்த முடிவு கைவிடப்பட்டு விட்டது. தயாரிப்பு நிறுவனத்திடம் சிவகார்த்திகேயன் அதிக சம்பளம் கேட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, சூர்யாவை வைத்து சுதா கொங்கரா எடுக்க இருந்த புறநானூறு திரைப்படமும் தொடர்ந்து தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. சூர்யாவும் கார்த்திக் சுப்புராஜுடன் சென்று விட்டார்.

 

இந்த நிலையில் சிவகார்த்திகேயனிடம் அதே கதையை கூறி ஓகே வாங்கி இருக்கிறார் சுதா கொங்கரா. தற்போது இதுதான் சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படமாக உருவாகிறதாம். இதில் வில்லனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிப்பதாக கூறப்படுகிறது. ஹீரோயினாக ஸ்ரீலீலா நடிக்கிறாராம். தெலுங்கு நடிகையான இவர், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்து குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த நிலையில் அவர் புறநானூறில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.

சற்று முன்