- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடடா… 3 மணி நேரம் ஓடும் தி கோட் படத்தில், இத்தனை விஷயங்களை செய்து வைத்திருக்கிறாரா...

அடடா… 3 மணி நேரம் ஓடும் தி கோட் படத்தில், இத்தனை விஷயங்களை செய்து வைத்திருக்கிறாரா டைரக்டர் வெங்கட் பிரபு? – ரொம்ப உஷாரா தான் எல்லாம் செஞ்சிருப்பார் போல…

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான தி கோட் படம், இன்னும் 10 நாட்களில் திரைக்கு வருகிறது. விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ஒரு நட்சத்திர கூட்டமே நடித்துள்ளது. பல முக்கிய நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்த படம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தி கோட் படத்தில் மறைந்த நடிகர்கள் விஜயகாந்த், விவேக் சிறப்பு தோற்றங்களில் வருகின்றனர். அவர்கள் வரும் காட்சிகள் ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் கிளைமாக்ஸில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

- Advertisement -

இதுவரை எந்த படத்திலுமே, ஒரு பாடலுக்கு என தனியாக குத்தாட்டம் போடாத நடிகை திரிஷா, தனது நெருங்கிய நண்பர் விஜய்க்காக, அவருடன் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அந்த பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மைக் மோகன் வில்லனாக நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தி கோட் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படம் குறித்து பாசிட்டிவ் கருத்துகளை கூறியுள்ளனர். படம் 3 மணி நேரம் திரையில் ஓடுகிறது. தவிர படத்துக்கு யு/ஏ தணிக்கை சான்று வழங்கப்பட்டுள்ளது. இதுதான் ரசிகர்களை சற்று யோசிக்க வைக்கிறது. ஏனெனில் 3 மணி நேரம் தாக்குபிடித்து பார்க்க முடியுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

- Advertisement -

ஆனால் தி கோட் படத்தை பொருத்தவரை, இந்த 3 மணி நேர விஷயத்தை இயக்குனர் வெங்கட்பிரபு மிகவும் நுணுக்கமாக கையாண்டு இருப்பதாக கூறப்படுகிறது. படம் துவங்கிய 30 நிமிடங்களில் படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களுமே அறிமுகமாகி விடுகின்றனர். 30 நிமிடங்களுக்கு பிறகு படம் விறுவிறுப்பான காட்சிகளை துவங்கி விடுகிறது.

அதாவது படத்தின் ப்ரீ கிளைமாக்ஸ், மெயின் கிளைமாக்ஸ் என திரைக்கதை 30 நிமிடங்களில் துவங்கி விடுவதால், இரண்டரை மணி நேரத்துக்கு சீட் நுனியில் அமர்ந்துதான் ரசிகர்கள் படம் பார்ப்பார்கள். தொடர்ந்து 80 சதவீத ஆக்‌ஷன் காட்சிகளுடன் அடுத்தது என்ன, அடுத்தது என்ன என சஸ்பென்ஸில் ரசிகர்களை படம் வேகமாக இழுத்து சென்றுவிடும். 3 மணி நேரம் படம் போனதே தெரியாத அளவுக்கு தி கோட் படத்தை வெங்கட்பிரபு உருவாக்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது என, மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி வீடியோ ஒன்றில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்