- Advertisement -
Homeபொழுதுபோக்குஉதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்தால்…? நடிகர் சூரி சொன்ன பதில் - இப்படி...

உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்தால்…? நடிகர் சூரி சொன்ன பதில் – இப்படி அவர் மேல பழியை தூக்கி போடறீங்களே ப்ரோ?

- Advertisement -

நடிகர் சூரி, வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டா சாப்பிடும் காமெடிதான் ரசிகர்களுக்கு அவரை அடையாளப்படுத்தியது. அதன்பின் குள்ளநரிக்கூட்டம், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சண்முகப்பாண்டியன், சீமராஜா போன்ற படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக சூரி மாறினார்.

காமெடி நடிப்பில் அசத்திக் கொண்டிருந்த அவரை, இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக மாற்றினார். கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் விடுதலை படத்தில் சூரி நடிப்பு வேற லெவலில் இருந்தது. அந்த படத்தின் 2ம் பாகத்தை வெகு ஆவலாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் படம் ரிலீசாவதில் தாமதம் நீடிக்கிறது.

- Advertisement -

மதுரையில் நடந்த திருமண விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் சூரி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படத்தில் நான் நடிக்க வேண்டிய காட்சிகளை எல்லாம் நடித்து முடித்து விட்டேன். மீதம் இருக்கிற காட்சிகளை எடுத்த பிறகு அந்த படம் விரைவில் வெளியாகும். நான் இப்போது நடித்து வந்த கருடன் படம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விடுதலை 2 வருவதற்கு முன்பே, கருடன் ரிலீஸ் ஆகிவிடும்.

விடுதலை 2 படத்தை போலவே, கருடன் படமும் சிறப்பாக வந்துள்ளது. விடுதலை படத்தை போலவே, கருடன் படமும் நல்ல படமாக இருக்கும். இந்த படமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக அமையும் என்று நான் நம்புகிறேன். அதனால் அந்த படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பாரக்கிறேன்.

- Advertisement -

கன்னிசாமி போல கன்னி ஓட்டுக்கு தயாராக இருப்பவர்கள் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும். உங்களி்ன் ஒவ்வொரு ஓட்டும் சாதாரண ஓட்டு அல்ல. அது நமது நாட்டின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும். நமது வாழ்க்கையின் வளர்ச்சிக்கான ஓட்டு அது என்பதால், அனைவரும் சிந்தித்து பார்த்து வாக்களிக்க வேண்டும், என்றார்.

அடுத்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சூரி, அவர் என்னை தேர்தல் பிரசாரம் செய்ய அழைக்கவில்லை. அதுமட்டுமின்றி நான் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன் என்பது அவருக்கே தெரியும். அவருக்கு எப்போதும் என் வாழ்த்துகள் உண்டு, என்று கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக பதில் அளித்தார் நடிகர் சூரி.

- Advertisement -

சற்று முன்