நடிகர் கார்த்தி நடித்த 25வது படம், கடந்த தீபாவளி பண்டிகையன்று ரிலீஸானது. ஜோக்கர், குக்கூ படங்களை இயக்கிய ராஜூ முருகன் இயக்கிய இந்த படம், பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்க்கு ஒரு சுறா, ஒரு குருவி, ஒரு வில்லு போல இந்த படம் பெரிய அளவில் அடி வாங்கியது. இந்தியன் 2 படத்துக்கு இது, அண்ணனாக இருந்து ரசிகர்களை கதற விட்டது.
அதன்பிறகு கார்த்தி இப்போது நடித்து வெளிவர உள்ள படம் மெய்யழகன். இந்த படத்தை 96 படத்தை இயக்கிய இயக்குனர் பிரேம்குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் அரவிந்த் சாமியும் நடித்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஸ்ரீ ரஞ்சினி, ஜெயப்பிரகாஷ், இளவரசு, கருணாகரன் போன்ற நட்சத்திர நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். இந்த படம் கார்த்தி நடிக்கும் 27வது படமாகும். இதற்கு முன்பே சர்தார் 2 படத்தில் அவர் நடிக்க ஆரம்பித்து அந்த படத்தின் படப்பிடிப்பும் வேகமாக இப்போது நடந்து வருகிறது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம், மருது, ஜீவா, காக்கிச்சட்டை, மாவீரன் கிட்டு, ஈட்டி, பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். ஆனால் அந்த படங்களில் எல்லாம் டப்பிங் குரலில்தான் ஸ்ரீ திவ்யா பேசியிருந்தார். அவரது சொந்த குரலில் பேசி நடிக்கவில்லை.
ஆனால் மெய்யழகன் பட இயக்குனர் இந்த படத்தில் ஸ்ரீ திவ்யாவை சொந்த குரலில் பேச வைத்திருக்கிறார். ஆனால் இன்னும் கதாநாயகன் கார்த்தி டப்பிங் பேச ஆரம்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. திரைப்பட விழாக்கள் மற்றும் விருது விழா்ககளில் மெய்யழகன் படத்தை திரையிடும் அளவுக்கு ஒரு விருது படமாக அதை இயக்குனர் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
அதனால்தான் படத்தில் நடிக்கும் அனைத்து கேரக்டர்களுமே சொந்த குரலில் பேச வேண்டும் என்று அவர் கூறுவதால், இதுவரை டப்பிங் பேசாத ஸ்ரீ திவ்யா இந்த படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார். அதுமட்டுமின்றி மெய்யழகன் படம் வருகிற செப்டம்பர் மாதம் 27ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.





