- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருச்சியில் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, எங்கே எப்போ நடக்குது? லேட்டஸ்ட் அப்பேட் வந்தாச்சு...

திருச்சியில் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, எங்கே எப்போ நடக்குது? லேட்டஸ்ட் அப்பேட் வந்தாச்சு – ஆனா ஆரம்பமே சொதப்பலா இருக்குதே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தி கோட் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் அதற்கான போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அமெரிக்காவில், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்பெஷல் ஸ்டுடியோவில் விஎப்எக்ஸ் பணிகள் நடக்கின்றன.

இந்த படத்தை தொடர்ந்து, கடைசியாக எச் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள விஜய், அதற்கு பின் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு, தனது அரசியல் பயணத்தில் தீவிரம் காட்ட திட்டமிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த அவர், அதுசார்ந்த நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட இருக்கிறார்.

- Advertisement -

விஜய் மக்கள் இயக்கத்தை, தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் இயக்கமாக மாற்றி, புஸ்லி ஆனந்தை கட்சியின் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். மாவட்டம் வாரியாக, முக்கிய நிர்வாகிகளையும் விஜய் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில், 2026ம் ஆண்டில் முதல்வர் இருக்கையை பிடிப்பதை லட்சியமாக கொண்டு விஜய் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இந்த மாத இறுதிக்குள் தனது கட்சியின் கொடியை விஜய் பிரமாண்ட விழா நடத்தி அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தி கோட் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விழா மிக பிரமாண்டமாகவும், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக விஜய் பேச்சும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தில் முதல் மாநாடு திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளும் துரிதமாக நடந்து வருகின்றன. 10 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகளுடன் பிரமாண்ட பந்தல் அமைக்கப்படுகிறது. 10 லட்சம் பேருக்கு உணவும் பரிமாற ஏற்பாடு நடக்கிறது.

திருச்சியில் பொன்மலை ஜி நகர் கார்னரில் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த இறுதியாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனுமதி கேட்டு திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் தவெக கட்சி சார்பில் விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 20ம் தேதி முதல் 24ம் தேதிக்குள் ஒரு நாளில் மாநாடு நடத்த அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அதனால் சரியான தேதியை குறிப்பிட்டு அனுமதி கேட்குமாறு ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்