- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள நடிகர் மோகன்லால் இப்படிப்பட்டவரா? தங்கலான் பட நடிகை பார்வதி இப்படி மோசமாக விமர்சித்திருக்கிறாரே? -...

மலையாள நடிகர் மோகன்லால் இப்படிப்பட்டவரா? தங்கலான் பட நடிகை பார்வதி இப்படி மோசமாக விமர்சித்திருக்கிறாரே? – பற்றி எரியுது மலையாள சினிமா

- Advertisement -

கலைத்துறையில் மலையாள சினிமாவுக்கு என தனி மரியாதை உண்டு. இன்றும் யதார்த்தமான படங்களை, சினிமாத்தனம் இல்லாத சினிமாவாக தரும் படைப்பாளிகளாக மலையாள பட இயக்குனர்கள் இருக்கின்றனர். நடப்பாண்டில் வெளியான பிரேமலு, மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், பிரம்மயுகம் போன்ற மலையாள படங்களில் பெரிய அளவில் வெற்றி பெற்றன.

ஆனால் தற்போது மலையாள சினிமாவில் நடிகைகளுக்கான எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. படங்களில் வாய்ப்புக்காக பாலியல் அழுத்தங்கள் நடிகைகளுக்கு தரப்படுகின்றன என்ற விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விசாரணை அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள நடிகைகள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூற துவங்கி விட்டனர். இதில் மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, சித்திக், முகேஷ், பாபா ராஜ், தமிழ் வில்லன் நடிகர் ரியாஸ்கான் வரை பல பேர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதில் சிலர் மீது போலீசார் வழக்கும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் சங்கம் ( அம்மா) தலைவராக இருந்த மோகன்லால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்களாக இருந்த 16 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அம்மா சங்கம் கலைக்கப்பட்டுள்ளது, மலையாள சினிமாவில் பெரிய அதிர்ச்சியை நடிகர், நடிகையர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்தவர் மற்றும் சமீபத்தில் வெளியான தங்கலான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை பார்வதி நேர்காணல் ஒன்றில் கூறியிருப்பதாவது, மலையாள நடிகர்கள் சங்கம் (அம்மா) கலைக்கப்பட்டதை அறிந்து, இவர்கள் எவ்வளவு பெரிய கோழைகள் என்று நினைத்தேன். சங்கத்தின் பொறுப்பாளர்களாக உள்ள நிர்வாகிகள், இப்படி சங்கத்தையே கலைப்பது பெரிய அதிர்ச்சியளிக்கிறது.

ஹேமா கமிட்டி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் தர முடியாமல் இப்படி ஒரு முடிவை பயந்து போய் எடுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல முடியாவிட்டாலும், ஹேமா கமிட்டியுடன் இணைந்து இந்த பிரச்னையை களைய முன்வந்திருக்கலாம். இனியாவது ஒரு நல்ல தலைமை, நல்ல தலைவர் வர வேண்டும் என்று நடிகை பார்வதி கூறியிருக்கிறார். நடிகர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகிய நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகளை, நடிகை பார்வதி, கோழைகள் என விமர்சித்திருப்பது பெரிய வைரலாகி வருகிறது.

சற்று முன்