- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளை மறுதினம் காலை தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ரிலீஸ், தளபதி விஜய் ரசிகர்களுக்கும், கட்சி...

நாளை மறுதினம் காலை தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ரிலீஸ், தளபதி விஜய் ரசிகர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் சொன்ன அறிவுரை என்ன தெரியுமா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் நாளை மறுதினம் 5ம் தேதி நாடு முழுவதும் ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் எல்லா தியேட்டர்களிலும் அன்று 1000க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிடப்படுகிறது. கேரளாவில் 700 திரைகளில் 400-க்கும் மேற்பட்ட காட்சிகள் திரையிடப்படுகிறது. முதல் நாளன்று மொத்தம் 6000 திரைகளில் தி கோட் ரிலீஸ் ஆகிறது.

மொத்தம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் சம்பளம் மட்டுமே ரூ. 200 கோடி என்ற நிலையில், மீதி ரூ. 200 கோடியில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பொருத்தவரை 1000 கோடி ரூபாய் வசூல் என்பது படக்குழுவினர் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

- Advertisement -

கடந்த முறை லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படம் ரூ. 650 கோடி வசூலித்ததாக கூறப்படும் நிலையில், இன்னும் ரூ. 350 கோடி வசூலை இந்த படம் எளிதாக கடந்து விடும் என்றும், படம் குறித்த வைப் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இயக்குனர் வெங்கட்பிரபு கூறி வருகிறார். அதே வேளையில் டிக்கெட் கட்டணம் ரூ. 700 முதல் ரூ. 800 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

நடிகர் விஜய் தி கோட் படத்தின் அபார வெற்றியை காட்டிலும், அவரது முழு கவனமும் இப்போது தனது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மீதுதான் இருக்கிறது. கட்சியின் முதல் அரசியல் மாநாடு வருகிற 23ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி சாலை என்னும் கிராமத்தில் 160 ஏக்கர் பரப்பளவில் நடக்க உள்ளது. அதுகுறித்து ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

- Advertisement -

கட்சி மாநாட்டில் நடிகர் விஜய், அரசியல்வாதி விஜயாக மாறி என்ன பேசப் போகிறார், என்ன மாதிரியாக அரசியல் பயணத்தை அவர் திட்டமிட்டுள்ளார், அவரது அரசியல் கட்சியின் எதிர்கால திட்டங்கள் என்ன என்பது குறித்து அறிந்துக்கொள்ள அவரது கட்சியினரும், ரசிகர்களும் மிகுந்த ஆவலாக, எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் வாய்மொழி உத்தரவாக, தி கோட் படம் வெளியாகும் நாளில் ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கோட் திரைப்பட கொண்டாட்டங்களால், பொதுமக்களுக்கு எந்தவிதமான இடையூறும் செய்து விடக் கூடாது என்று கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்