- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்தாரா? தமன்னாவுக்கு அடித்த ஜாக்பாட் - உண்மையை...

அந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்தாரா? தமன்னாவுக்கு அடித்த ஜாக்பாட் – உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் இந்த படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது. இந்த படத்தில் ரெஜினா கசாண்ட்ரா துனியா விஜய் ஆகியோர் நெகடிவ் கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

நடிகை நயன்தாரா போலவே தமிழ் சினிமாவில் பிரபல நாயகியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. வியாபாரி கல்லூரி கண்டேன் சிறுத்தை காதலை படிக்காதவன் சுறா வேங்கை வீரம் என பல ஹிட் படங்களில் நடித்தவர் தமன்னா. குறிப்பாக பாகுபலி படத்தில் தமன்னா நடிப்பு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த அவர் ஒரு கட்டத்தில் தெலுங்கு படங்களில் தாராளமான கவர்ச்சி காட்டி நடித்தார். அதன் பிறகு இந்திக்கு சென்ற அவர், பாலிவுட் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு தாராளமாக கவர்ச்சியை வெளிப்படுத்தினார். உதட்டு முத்தக்காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் வேற லெவலில் நடித்து அதிர வைத்தார்.

குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் காவலய்யா என்ற பாடல் காட்சியில் நடிகை தமன்னாவின் குத்தாட்டம் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் கல்லூரி என்ற படத்தில் ஷோபா என்ற கேரக்டரில் நடித்த தமன்னாவா இது என்றுதான் புலம்பும் நிலை ஏற்பட்டது.

- Advertisement -

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான படம் பையா. இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். லிங்குசாமி டைரக்ட் செய்த இந்த படம் கார்த்தி திரை பயணத்தில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது. இந்த படத்தில் நாயகியாக நடித்த தமன்னாவுக்கும் இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்து, அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்தது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற பையா படத்தின் இயக்குனர் லிங்குசாமி கூறியதாவது, பையா படத்தில் தமன்னா கேரக்டரில் முதலில் நாயகியாக நடிக்க இருந்தது நடிகை நயன்தாரா தான். ஆனால் கடைசி நேரத்தில் படத்தில் வரும் சில விஷயங்களை நயன்தாரா ஒத்துக்கொள்ளவில்லை. அதன்பிறகுதான் பையா படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக தமன்னா நடித்தார் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்